Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

குறைந்த விலை ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
April 14, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

ஏதெnew atherர் எனெர்ஜி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு பிரீமியம் வசதிகள் நீக்கப்பட்டு ₹, 1,16,379 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளை பெற்ற 450X புரோ பேக் வேரியண்ட் விலை ₹ 1,46,743 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பவர் வெளியீடு மற்றும் ரேஞ்சு உட்பட அடிப்படையான புள்ளிவிவரங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. 450X தொடக்க நிலை வேரியண்ட்டை தவிர அனைத்து ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி அம்சங்களையும் விரும்பினால், ப்ரோ பேக்கை தேர்வு செய்ய விலை மேலும் ரூ.30,364 கூடுதலாக உள்ளது.

2023 Ather 450X

ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் பெர்ஃபாமென்ஸ் அம்சங்களில் இரு வேரியண்டுகளில் எந்த மாற்றங்களும் இல்லை. 3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக
26 Nm டார்க் வழங்குகின்றது. தொடக்க நிலை வேரியண்டில் ஒற்றை ரைடிங் மோடு மட்டுமே பெற்றுள்ளது. டாப் 450X புரே பேக்கில் Warp, Sport, Ride, Eco,  மற்றும் SmartEco போன்ற ரைடிங் மோடுகள் உள்ளன.

அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 146 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 100 கிமீ வரை வழங்கும்.

இரண்டு வகைகளிலும் ஒரே பேட்டரி பேக் இருந்தாலும், குறைவான விலை பெற்ற வேரியண்ட் வீட்டு சார்ஜரில் சார்ஜ் ஏறுவதனால் முழுமையாக சார்ஜ் செய்ய, 15 மணிநேரம் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் ProPack வேரியண்ட் வீட்டு சார்ஜரில் 5 மணி 40 நிமிடங்களில் முழு சார்ஜ் அடையும். கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பெற்றுள்ளது.

குறிப்பாக, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ஆன் போர்டு நேவிகேஷன், கனெக்டேட் மொபைல் ஆப், TPMS, ம்யூசிக் மற்றும் அழைப்புகள், கலர் டிஸ்பிளே என பலவற்றை பெற்றதாக 450X புரே பேக்கில் இடம்பெற்றுள்ளது.

ather 450x escooter

Ather 450X Price list

ஏதெர் 450X விலை ₹ 1,16,379

ஏதெர் 450X Pro-Packed விலை ₹ 1,46,743

இரண்டு வேரியண்டிலும் வாகனம் மற்றும் சார்ஜருக்கு 3 ஆண்டுகள்/30,000 கிமீ. இருப்பினும், பேட்டரிக்கு, பேஸ் வேரியண்டில் 3 ஆண்டுகள்/30,000 கிமீ மற்றும் ப்ரோபேக் மாறுபாட்டிற்கு 5 ஆண்டுகள்/60,000 கிமீ உத்தரவாதம் வழங்கப்பட உள்ளது.

ஏதெர் 450X ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

2023 ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,23,456 முதல் ₹ 1,54,764

ஏதெர் 450X பவர் & டார்க் விபரம் என்ன ?

450X ஸ்கூட்டரில் 3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவர் மற்றும் 26 Nm டார்க் வழங்குகின்றது.

Tags: Ather 450X
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version