எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற ஏதெர் 450X, ஓலா S1 Pro மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் என மூன்று மாடல்களை ஒப்பீடு செய்து முக்கிய அம்சங்கள், பேட்டரி திறன் மற்றும் ஆன்-ரோடு விலை அறிந்து கொள்ளலாம்.

2023 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் விலை மாற்றத்தை பெற்றுள்ள மின்சார ஸ்கூட்டர்களில் ஏதெர் 450X வந்துள்ளது. ஓலா நிறுவனமும் பல்வேறு மாறுபட்ட பேட்டரி திறன் கொண்ட ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

ola11

Ather 450X vs Ola S1 Pro vs TVS iQube

மூன்று ஸ்கூட்டர்களும் மாதந்தோறும் 10,000 க்கு அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் S1, S1 Air, மற்றும் S1Pro மாடல் பல்வேறு 2KWh, 3KWh மற்றும் 4KWh என மாறுபட்ட பேட்டரி ஆப்ஷன்களை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.

Ola Specification S1 Air S1 S1 Pro
Battery pack 2, 3 & 4 kWh 2 & 3 kWh 4 kWh
Top Speed 85 km/h 90 km/h 116 km/h
Range (claimed) 85 – 165 km 91 – 141 km 181 km
Riding modes Eco, Normal, Sports Eco, Normal, Sports Eco, Normal, Sports, Hyper

அடுத்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் மாடல் iQube S மற்றும் iQube என இரு விதமாக கிடைக்கின்றது. இந்த மாடலில் பொதுவாக 3.04 KWh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்யூப் சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 100 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 75-80 கிமீ வரை வழங்கும்.

iQube Specification iQube iQube S
Battery pack 3.04 kWh 2 & 3 kWh
Top Speed 78 km/h 78 km/h
Range (claimed) 100 km 100 km
Riding modes Eco, Power Eco, Power

பிரபலமான ஏதெர் 450X ஸ்கூட்டரில் இருவிதமாக வேரியண்ட் கிடைக்கின்றது. 3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது. சிங்கிள் சார்ஜில் 146 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 100 கிமீ வரை வழங்கும்.

Ather Specification 450X 450X Pro-Packed
Battery pack 3.7 kWh 3.7 kWh
Top Speed 90 Km/h 90 Km/h
Range (claimed) 146 km 146 km
Riding modes default Warp, Sport, Ride, Eco, SmartEco

Ather 450X vs Ola S1 Pro vs TVS iQube – விலை ஒப்பீடு

சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரேஞ்சு வழங்குவதில் ஏதெர் 450X தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. ஓலா S1 புரோ மாடல் நிகழ் நேரத்தில் 145 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கின்றது. நடைமுறைக்கு ஏற்ற மாடலாக டிவிஎஸ் ஐக்யூப் விளங்குகின்றது.

e-Scooter Price
Ather 450X ₹ 1,22,189 – ₹ 1,52,539
Ola S1 Air, S1, S1 Pro ₹ 91, 854 – ₹ 1,40,599
TVS iQube ₹ 1,14,936 – ₹ 1,21,057

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)