Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பை-பேக் திட்டத்தை அறிமுகமானது

by automobiletamilan
October 22, 2020
in பைக் செய்திகள்

Ather 450X-e scooter

இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், 450X மற்றும் 450 பிளஸ் ஸ்கூட்டரில் சிறப்பு உறுதிப்படுத்தப்பட்ட பை-பேக் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்சமாக ரூ.85,000 வரை திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு சில “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் செயல்படும் மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஏத்தர் எனெர்ஜி தனது சொந்த லித்தியம் அயன் பேட்டரி பேக்குகளையும், ஏத்தர் 450 தயாரிப்பு வரிசையில் ஒட்டுமொத்தமாக மிக வலுவான தளத்தையும் உருவாக்கியுள்ளது.

ஏத்தர் 450 பிளஸ் ஸ்கூட்டரின் விலையை ரூ.9,000 வரை குறைத்துள்ளதால், இப்போது ரூ.1,39,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ரூ.85,000 வரை உறுதியாக திரும்ப பெறுவதற்கு இரு மாடல்களிலும் அதிகபட்சமாக மூன்று வருடத்தில் 30,000 கிமீ வரை மட்டுமே பயணித்திருக்க வேண்டும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் சந்தா திட்டங்களும் நுகர்வோரின் பயன்பாட்டுடன் பொருந்தக்கூடிய வகையில் மிகவும் சிறப்பான வகையில் மாற்றப்பட்டுள்ளன. இப்போது மாதத்திற்கு 125 ரூபாய் தொடங்கி, வாடிக்கையாளர் அவற்றின்
பயன்பாட்டின் அடிப்படையில் தேர்வு செய்ய, 4 சுயேச்சையான பேக்குகளை
வழங்குகின்றது.

அவற்றில் ஏத்தர் கனெக்ட் லைட் ( அடிப்படை அம்சங்கள்), ஏத்தர் கனெக்ட் புரோ, ஏத்தர் சர்வீஸ் லைட் (பராமரிப்பு, ஆர்எஸ்ஏ மற்றும் லேபர்) மற்றும் ஏத்தர் சர்வீஸ் புரோ (பிரீமியம் சேவை அனுபவம்) ஆகியவை அடங்கும். இதற்கிடையில், ஏத்தர் கிரீட் பொது சார்ஜிங் மையங்களில் மார்ச் 2021 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏத்தர் குத்தகை திட்டம்

ஏத்தர் நிறுவனத்தின் சென்னை மற்றும் பெங்களூரு டீலர்களில் வழங்கப்படுகின்ற குத்தகை திட்டம் ரூ.25,000 துவங்கி அதிகபட்சமாக ரூ.60,000 வசூலிக்கப்படுகின்றது.

விரைவில் இந்நிறுவனம் டெல்லி, மும்பை,புனே, ஹைத்திரபாத் உட்பட தமிழகத்தில் கோவை மாவட்டத்திலும் துவங்கப்பட உள்ளது. மேலும் அடுத்த நிதி ஆண்டிற்குள் நாடு முழுவதும் புதிதாக 25 டீலர்களை துவங்க உள்ளது. ஓசூரில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில் ஆண்டுக்கு 50,000 யூனிட்டுகளை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளது.

Web title : Ather Energy announces new buy-back scheme for scooters

Tags: Ather 450X
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version