Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

எக்செல்சியர்-ஹென்டர்சன் பிராண்டுக்கு உரிமை கோரிய பஜாஜ் ஆட்டோ

by automobiletamilan
December 27, 2020
in பைக் செய்திகள்

அமெரிக்காவின் எக்செல்சியர்-ஹென்டர்சன் (Excelsior-Henderson) பிராண்டிற்கான வர்த்தக முத்திரை உரிமையை ஐரோப்பாவில் மோட்டார்சைக்கிள் பார்ட்ஸ் மற்றும் ஆடைகளுக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கோரியுள்ளது.

Excelsior-Henderson நிறுவனத்தின் சுருக்கமான பார்வை

1876 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எக்ஸெல்சியர் சப்ளை என்ற சைக்கிள் மற்றும் சைக்கிள் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம், 1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் தயாரிக்கும் ஹென்டர்சன் நிறுவனமும், இரு நிறுவனங்களையும் Schwinn என்ற நிறுவனம் கையகப்படுத்திய பின்னர் பின்னர் எக்செல்சியர்-ஹென்டர்சன் என பெயர் பெற்று மோட்டார் சைக்கிள்களை தயாரித்தது. ஆனால் 1931 ஆம் ஆண்டு இந்நிறுவனம் திவாலானதால் பிராண்டு கைவிடப்பட்டது.

மீண்டும் 1990 களில் மினசோட்டாவைச் சேர்ந்த ஹன்லோன் நிறுவனம் ஹென்டர்சன் மற்றும் எக்செல்சியர் பெயர்களுக்கான உரிமைகளை வாங்கி 1,386 சிசி எஸ் & எஸ் வி-இரட்டை இன்ஜின் மோட்டார் சைக்கிளை சூப்பர் எக்ஸ் என்ற பெயரில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால் 1950 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உற்பத்தி 1998-ல் கைவிடப்பட்டது.

பஜாஜ் ஆட்டோ

2018 ஆம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம், European Union Intellectual Property Office (EUIPO) மூலம் மோட்டார்சைக்கிள் டிசைன் பிரிவில் வாகனங்கள், பாகங்கள் மற்றும் சேவை ஆகியவற்றின் கீழ் வரத்தக முத்திரை கோரிய நிலையில், இப்போது டிசம்ப்ர் 15, 2020-ல் ஆடை மற்றும் மோட்டார் சைக்கிள் கியர் பகுதியில் எக்செல்சியர்-ஹென்டர்சன் உரிமை கோரியுள்ளது.

சர்வதேச அளவில் கேடிஎம், ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 1000சிசி க்கு கூடுதலான திறன் பெற்ற மாடல்களை எக்செல்சியர்-ஹென்டர்சன் பிராண்டில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால், எப்பொழுது வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

image source

Tags: Excelsior-Hendersonஎக்செல்சியர்-ஹென்டர்சன்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version