இந்தியாவின் க்ரூஸர் ரக சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை 82,381 ரூபாய் (விற்பனையகம் சென்னை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கிடைத்து வந்த அவெஞ்சர் 180 ஸ்டீரிட் அதிகார்வப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் டெலிவரி தொடங்கப்பட்டிருந்து புதிய அவெஞ்சர் 160 பைக் தற்போது நாடு முழுவதும் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்கள் மூலம் கிடைக்க தொடங்கியுள்ளது.
அவெஞ்சர் 160 ஸ்டீரிட்
தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் பெறாமல் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களை கொண்டுள்ள 160சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த 180 பைக் போன்றே அமைந்துள்ளது.
பல்சர் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15 hp குதிரைத்திறன் மற்றும் 14.6 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
அவென்ஜர் 160 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ரியர் வீல் லிஃப்ட் பாதுகாப்பு ( Rear-Lift Protection -RLP) வழங்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பைக் வரிசையில் இடம்பெற்றிருந்த அவென்ஜர் 180 பைக் கைவிடப்பட்டுள்ளது.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் ABS – ரூ. 82 381/-
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் ABS – ரூ.1,04,019
பஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ் ABS – ரூ. 1,04,019
( விற்பனையக விலை சென்னை )