இந்தியாவில் ரூ.67,386 விலையில் பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் அல்லாத மாடலை விட ரூ. 2000 மட்டும் விலை உயர்த்தப்பட்டு வேறு எந்த மாற்றங்களையும் பெறாமல் அமைந்துள்ளது.

பல்சர் 150 நியான் பைக் மாடலில் நியான் சிவப்பு, நியான் மஞ்சள் மற்றும் நியான் சில்வர் ஆகிய நிறங்கள் கிடைக்க உள்ளது. பல்சர் 150 நியான் கடந்த நவம்பர் 2018-ல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது,

பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ்

14 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த மாடலில் தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்ஸர் வரிசையில் தற்போது RS200, NS200, NS160, 220F, 180F, 150, 150 ட்வீன் டிஸ்க்,150 கிளாசிக் மற்றும்  135LS என மொத்தம் 9 மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.