ஏப்ரல் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்சர் 125 முதல் பல்சர் 220 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணியாக விளங்குகின்ற பல்சர் 125, பல்சர் 150, பல்சர் 180, பல்சர் என்எஸ் 200 மற்றும் பல்சர் 220F போன்ற மாடல்கள் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றபட்டுள்ளது. குறிப்பாக தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் இல்லாமல், எஃப்ஐ என்ஜின் மற்றும் புகைப்போக்கியில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தபட்டுள்ளது.
பல்சர் 125 நியோன் பைக்கின் விலை ரூபாய் 5,178 முதல் அதிகபட்சமாக ரூபாய் 6,502 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 124.38 சிசி என்ஜின் 12.1 ஹெச்பி மற்றும் 11 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.
பல்சர் 150 பைக்கின் விலை ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 149 சிசி என்ஜின் 14 ஹெச்பி மற்றும் 13.2 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.
பல்சர் 180F பைக் மாடலின் விலை ரூ. 11,437 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 178.6 சிசி என்ஜின் 17 ஹெச்பி மற்றும் 14.2 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.
பல்சர் என்எஸ்200 பைக் மாடலின் விலை ரூ. 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 200 சிசி என்ஜின் 23 ஹெச்பி மற்றும் 18.2 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.
updated:-
Bajaj Pulsar 125 BS6 Neon Drum: ரூ. 71,033
Bajaj Pulsar 125 BS6 Neon Disc: ரூ. 75,361
Bajaj Pulsar 150 Neon BS6: ரூ. 85,900
Bajaj Pulsar 150 BS6 Single Disc: ரூ. 92,400
Bajaj Pulsar 150 BS6 Twin Disc: ரூ. 96,500
Bajaj Pulsar 180F BS6 Neon: ரூ. 1,07,000
Bajaj Pulsar 220F BS6: ரூ. 1,16,000
Bajaj Pulsar NS 200 BS6: ரூ. 1,24,000
Bajaj Pulsar RS 200 BS6: ரூ. 1,43,000
(ex-showroom)