பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜின் பெற்ற புதிய சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,74,000 முதல் துவங்குகின்றது. மோட்டோ ஜிபி நிறத்தைப் பெற்ற மாடல் ரூ. 1,74,900 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.2Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. முன்பாக விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-4 மாடலை போலவே தொடர்ந்து அமைந்துள்ளது.

மூன்று பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.