சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப். 250 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது பிஎஸ் 6 தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட், யமஹா FZS, FZ, R15 உள்ளிட்ட மாடல்களில் இடம்பெற உள்ள பிஎஸ் 6 என்ஜின் தொடர்பான விபரங்கள் வெளியான நிலையில் தற்பொழுது சுசூகியின் பிஎஸ் 6 என்ஜின் விபரங்கள் கசிந்துள்ளது. இந்நிறுவனத்தின் மாடலும் மற்ற மாடல்களை போல பவர் குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆவணத்தின் படி, 249 சிசி ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் BS-VI மாசு உமிழ்வுக்கு இணக்கமான ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 பைக்கின் 249cc என்ஜின் பவர் 19.5 கிலோவாட் அல்லது 25.7 bhp வழங்கும் என வெளிப்படுத்துகிறது. BS-IV பைக் மாடல், ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 அதிகபட்ச சக்தியை 19.8 கிலோவாட் அல்லது 26.1 bhp வெளிப்படுத்துகிறது.
மற்றபடி தோற்ற அமைப்பில் பெரிதான மாற்றங்கள் இருக்க வாய்பில்லை. கூடுதலாக பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.