Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

தற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்

by MR.Durai
16 October 2019, 7:55 am
in Bike News
0
ShareTweetSend

Harley Davidson live wire

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலான லைவ் வயர் விற்பனைக்கு வெளியிடபட்ட சில மாதங்களுக்குள் தரம் சார்ந்த சிக்கல்களால் தற்காலிகமாக உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், காரணத்தை தெளிவாக இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஹார்லி-டேவிட்சனின் அதன் முதல் எலெக்ட்ரிக் க்ரூஸர் மோட்டார் சைக்கிள், லைவ்வைர் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் லைவ்வைரை அறிமுகப்படுத்தியது. ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு முன்பே மோட்டார் சைக்கிளை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. லைவ்வைரில் இறுதி தர சோதனைக்கு உட்படுத்தப்படும்போது ஒரு ‘தரமற்ற நிலை’ இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சனின் அறிக்கையின் படி, பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் இயக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் பைக்குகளை வீட்டிலேயே சார்ஜிங் செய்வதனை தவிர்த்து ஹெச்.டி. டீலர்கள் மூலம் மட்டும் சார்ஜிங் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

சில அமெரிக்க ஆட்டோமொபைல் ஊடகங்கள், வெளியிட்டுள்ள தகவலில் இந்த பைக்கின் சார்ஜிங் அமைப்பில் கோளாறு உள்ள காரணத்தாலே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய சந்தையில் ஹார்லி-டேவிட்சன் லைவ்வயர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 15.5 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக்கில் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் சிட்டியில் 235 கிமீ பயணிக்கலாம். அதுவே ஹைவே ரேஞ்சு 113 கிமீ ஆக இருக்கும். இரண்டின் சராசரியாக முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 152 கிமீ வரை பயணிக்கலாம். இந்த பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், 40 நிமிடங்களில் 80% ஆகவும், 1 மணி நேரத்தில் 100% ஆகவும் ரீசார்ஜ் செய்ய இயலும். அதே நேரத்தில் சாதாரண ஏசி சார்ஜர் முழு ரீசார்ஜ் செய்ய 12-13 மணி நேரம் ஆகும்.

b17e4 2019 harley davidson livewire charging port

லைவ் வயர் மின்சார பைக்கில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 103 hp குதிரைத்திறன், 116 NM முறுக்குவிசையையும் வழங்கும். 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகிறது.

ஸ்போர்ட், ரோடு, ரெயின், ரேஞ்சு மற்றும் மூன்று கஸ்டம் மோட் என மொத்தமாக 7 விதமான முறைகளை பெற்றுள்ளது.

இந்த பைக்கில் 2.3 இன்ச் TFT டிஸ்ப்ளே, எல்இடி விளக்குகள், ஷோவா பேலன்ஸ் ஃப்ரீ ரியர் குஷன்-லைட் மோனோஷாக் அப்சார்பர்,  43 மிமீ இன்வெர்டேட் ஷோவா அப்சைடு-டவுன் ஃபோர்க், முன்புறத்தில் இரட்டை 300 மிமீ டிஸ்க்குடன் காலிப்பரில் 4 பிஸ்டன் மற்றும் பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

லைவ் வயர் பைக்கில் பாதுகாப்பினை அதிகரிக்க, ரிஃப்ளெக்ஸ் டிஃபென்சிவ் ரைடர் சிஸ்டம்ஸ் (Reflex Defensive Rider Systems -RDRS), கார்னரிங் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(சி-ஏபிஎஸ்), கார்னரிங் டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பு (C-TCS) மற்றும் டிராக் டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

Related Motor News

குறைந்த விலை லைவ்வயர் எலக்ட்ரிக் கான்செபட் அறிமுகமானது

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

Tags: Harley-Davidson LiveWire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan