வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து 1.5 சதவிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, பேஷன் பிளஸ் போன்ற மாடல்களை தவிர மற்ற மாடல்களின் விலை அதிகரிக்கப்படலாம். மாடல்களின் விலைப் பட்டியல் ஜூலை 3-ல் வெளியாகும்.
Hero Motocorp Price Hike
விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்துவது, உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வணிகத் தேவை போன்ற பல்வேறு காரணிகளை மனதில் வைத்து, இரு சக்கர வாகன உற்பத்தியாளர் அவ்வப்போது மேற்கொள்ளும் விலை மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழையின் தொடக்கம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார தேவையின் வளர்ச்சி நன்றாகவே உள்ளன. மேலும், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க வரவிருக்கும் பண்டிகைக் காலம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3ஆம் தேதி ஹீரோ-ஹார்லி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட முதல் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 விற்பனைக்கு வரவுள்ளது.