Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.64,900 விலையில் விற்பனைக்கு வெளியான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6

by automobiletamilan
November 7, 2019
in பைக் செய்திகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஸ்ப்ளெண்ட்ர் ஐஸ்மார்ட் பைக் இந்தியாவின் முதல் பிஎஸ் 6 மோட்டார்சைக்கிள் மாடலாக ரூ.64,900 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.7,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ் 4 ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட்டில் 9.3hp பவரை வெளிப்படுத்தும் 109.25சிசி என்ஜின் பொருத்தபட்டிருந்த நிலையில், இதற்கு மாற்றாக 113.2 சிசி என்ஜின் i3s உடன் இடம்பெற்றுள்ளது. முந்தைய என்ஜினுக்கு முற்றிலும் மாற்றறாக புதிய Programmed FI என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 9.0 ஹெச்பி (6.73Kw) பவரை தொடர்ந்து 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குகின்றது. ஆனால் இதன் பவர் முந்தைய மாடலை விட 0.3 ஹெச்பி வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டார்க் விபரம் 9.89 என்எம் ஆகும். முந்தைய மாடலை விட 10 % டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஐஸ்மார்ட் பைக்கின் நீளம், மற்றும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குடன் கூடிய டிரம் என இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைக்க உள்ளது. முதற்கட்டமாக 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் மாடல் கிடைக்க தொடங்கியுள்ளது. பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான FI என்ஜின், சிறிய அளவிலான ஸ்டைலிங் டூயல் டோன் மாற்றங்கள் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் உட்பட சில மாற்றங்களை கொண்டிருக்கின்றது.

புதிய மாடலின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 15 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 185 மிமீ ஆகவும், முன்புற சஸ்பென்ஷன் 120 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டு, பிரகாசமான ஹெட்லைட்டை கொண்டுள்ளது. கூடுதலாக பைக்கின் நீளம் அதிகரிக்கப்பட்டு சிறப்பான ஸ்டெபிளிட்டியை வழங்குகின்றது. சில டீலர்களை வந்தடைந்துள்ள பிஎஸ்6 ஹீரோ ஸ்ப்ளெண்ட்ர் ஐஸ்மார்ட் நாடு முழுவதும் அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் கிடைக்க உள்ளது.

Tags: Hero MotoCorpHero Splendor iSmartஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட்
Previous Post

ஹஸ்குவர்னா விட்பிலன் 401, ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 401 அறிமுகம் – 2019 இஐசிஎம்ஏ

Next Post

புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது – 2019 இஐசிஎம்ஏ

Next Post

புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் காட்சிப்படுத்தப்பட்டது - 2019 இஐசிஎம்ஏ

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version