இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 200சிசி மற்றும் ஸ்கூட்டர் சார்ந்த சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக 200சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கினை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹீரோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை தொடர்ந்து, EICMA 2018 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டூரர் ரக எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய இரு மாடல்களையும், வரும் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் உறுதியாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக 2017 EICMA மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அட்வெனச்சர் ரக மோட்டார்சைக்கிளில் எகஸ்ட்ரீம் 200 மாடலில் இடம்பெற உள்ள அதே எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக உள்ள மாடலும் ரூ.1 லட்சத்தக்கு குறைந்த விலையை கொண்டிருக்கும் என்பதனால் நிச்சியமாக சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்பபுகள் உள்ளது.