- டூயல் டிஸ்க் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விலை ரூ.1,03,500 லட்சம்.
- அதிகபட்சமாக 15 hp பவர் மற்றும் 14 என்எம் டார்க் வழங்குகின்றது.
- அப்பாச்சி 160, ஜிக்ஸர், யமஹா FZ v3.0 பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 99,250 ஆரம்ப விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக் விற்பனைக்கு வெளியானது. டூயல் டிஸ்க் மற்றும் சிங்கிள் டிஸ்க் என இரு விதமான ஆப்ஷனை கொண்டுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
டிசைனை பொறுத்தவரை அப்பாச்சி 160, ஜிக்ஸர் போன்வற்றுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பல்வேறு அம்சங்களை பெற்று ஹீரோ இம்முறை போட்டியாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.
சிங்கிள் டிஸ்க் – ரூ. 99,250
டூயல் டிஸ்க் – ரூ. 1,03,250
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)