Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் விலை உயர்ந்தது

by automobiletamilan
October 7, 2020
in பைக் செய்திகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160சிசி சந்தையில் நுழைந்த ஸ்டைலிஷான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விலையை ரூ.2050 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர எக்ஸ்பல்ஸ் 200, பேஸன் புரோ, கிளாமர் 125, ஸ்பிளெண்டர் என பெரும்பாலான மாடல்களின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் குறைந்த விலை 160சிசி மாடலாக பல்வேறு வசதிகளை பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்ற புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.2050 வரையும், டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் ரூ.1550 வரை விலை உயர்ந்துள்ளது.

அடுத்து, அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1940 வரையும், கிளாமர் 125 விலை ரூ.1250 மற்றும் பேஸன் புரோ விலை ரூ.760, ஹெச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் ரூ.950, மற்றவை ரூ.1300 வரை உயர்ந்துள்ளது.

பிரசத்தி பெற்ற ஸ்பிளெண்டர் பிளஸ், ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் என இரண்டும் முறையே ரூ.450 மற்றும் ரூ.260 என விலை உயர்ந்துள்ளது. குறைந்த விலை 125சிசி மாடல் சூப்பர் ஸ்பிளெண்டர் ரூ.1300 உயர்த்தப்பட்டுள்ளது.

ஹீரோ பைக்குகள் விலை பட்டியல்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் – ரூ.60,960 – ரூ.64,470

ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் – ரூ.65,590 – ரூ. 68,150

சூப்பர் ஸ்பிளெண்டர் – ரூ.69,450 – ரூ.72,950

ஹெஃஎஃப் டீலக்ஸ் – ரூ.48,950 – ரூ.59,800

ஹீரோ பேஸன் புரோ – ரூ. 66,500 – ரூ.68,700

கிளாமர் 125 – ரூ.71,500 – ரூ.74,500

எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்-6 – ரூ.1,13,730

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் – ரூ.1,02,000 – ரூ.1,05,050

(விற்பனையக விலை டெல்லி)

web title : hero xtreme 160r , xpulse 200, splendor, and more bikes price hiked

Tags: Hero Xtreme 160R
Previous Post

சுசூகி ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலில் ரைட் கனெக்ட் வசதி அறிமுகம்

Next Post

பிஎஸ்-6 பிஎம்டபிள்யூ G 310 R , G 310 GS பைக்கின் எதிர்பார்ப்புகள்

Next Post

பிஎஸ்-6 பிஎம்டபிள்யூ G 310 R , G 310 GS பைக்கின் எதிர்பார்ப்புகள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version