ரூ.70,616 ஆரம்ப விலையில் விற்பனைக்கு ஹோண்டா ஆக்டிவா 6ஜி 20வது ஆண்டு விழா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஆக்டிவா மாடல் இந்தியளவில் அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
2000 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று 2009 ஆம் ஆண்டில் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வெளியாகியது. அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஹெச்இடி நுட்பத்தை பெற்றதாகவும், 2019 ஆம் ஆண்டு 26க்கு மேற்பட்ட புதிய காப்புரிமை கோரப்பட்ட நுட்பங்களுடன் ஆக்டிவா 6ஜி விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
புதிய 109.51 சிசி என்ஜின் கொண்டு ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.
20வது ஆண்டு விழா பதிப்பில் புதியதாக மேட் மெச்சூர் பிரவுன், நைட் ஸ்டார் பிளாக் நிறத்தை பெற்று, பொருந்தக்கூடிய பின்புற கிராப் ரெயில்களுடன். பளபளப்பான பொறிக்கப்பட்ட 20 ஆண்டு விழா சின்னம் மற்றும் சிறப்பு தங்க ஆக்டிவா லோகோ ஆகியவை மிகவும் தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற மாடல்களில் இருந்து அடையாளம் காணக்கூடிய வகையில் புதிய பாடி ஸ்டிக்கரிங் பெற்ற ஆக்டிவா 6ஜி மாடலில் முன் மற்றும் பின்புறம் கருப்பு சக்கரங்களுடன் பழுப்பு நிற கவர் மற்றும் இருக்கை, கருப்பு நிற கிரான்கேஸ் கவர் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 20வது ஆண்டு விழா பதிப்பு
Activa 20th Year Anniversary Edition STD – ரூ.70,616
Activa 20th Year Anniversary Edition DLX – ரூ.72,116
சாதாரண வேரியண்ட்டை விட ரூ.1500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
web title : Honda Activa 20th Anniversary Edition launched