மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் மாடல் ரூ.61,113 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றதாக ஏவியேட்டர் வந்துள்ளது.
2017 ஹோண்டா ஏவியேட்டர்
- பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது.
- ஒளி குறைவான இடங்களில் தானாகவே ஒளிரும் முகப்பு விளக்கினை ஏவியேட்டர் பெற்றுள்ளது.
- டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.
பி.எஸ் 4 தர 109.19CC கொண்ட ஒற்றை சிலிண்டர் அதிகபட்சமாக 8 ஹெச்பி பவருடன் , 8.94 டார்க்கினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சினில் சிறப்பான மைலேஜ் தரும் நோக்கில் ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள ஏவியேட்டரில் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஆக்டிவா ஸ்கூட்டரின் அதே என்ஜினை ஏவியேட்டர் பெற்றிருந்தாலும் கூடுதலான நீளம் மற்றும் உயரத்தை பெற்றிருப்பதுடன் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனாலாக இடம்பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் ஹைட்ராலிக் வகை சஸ்பென்ஷனையும் பெற்றதாக உள்ளது.
இருக்கையின் அடியில் அமைந்துள்ள ஸ்டோரேஜ் பெட்டியில் மொபைல் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட் வசதியுடன் வெள்ளை, சிவப்பு , கருப்பு மற்றும் சில்வர் என நான்கு விதமான நிறங்களில் 2017 ஹோண்டா ஏவியேட்டர் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
புதிய ஹோண்டா ஏவியேட்டர் விலை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலை பட்டியல் சென்னை எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விபரம்..
நகரம் | வேரியன்ட் விபரம் | எக்ஸ்-ஷோரூம் | ஆன்-ரோடு |
---|---|---|---|
சென்னை | AVIATOR DISK | 60099 | 67070 |
AVIATOR DRUM | 54659 | 61133 | |
AVIATOR DISK (BS-IV) | 59561 | 66483 | |
AVIATOR DRUM (BS-IV) | 55106 | 61622 | |
Aviator Drum Alloy (BS-IV) | 57086 | 63782 |
Honda Aviator BS-IV launched details in Tamil