Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

45 லட்சத்துக்கு ஏலம் போன ஜாவா மோட்டார்சைக்கிள் சிறப்புகள் தெரியுமா ?

by automobiletamilan
March 30, 2019
in பைக் செய்திகள்

இந்திய சந்தையில் ஜாவா மோட்டார்சைக்கிள் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், தனது முதல் டெலிவரியை இன்றைக்கு துவங்கியுள்ளது. 1.55 லட்சம் விலையுள்ள ஜாவா பைக்கினை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

13  ஜாவா பைக்குகள் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. முதல் 100 சேஸ் எண்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான அடிச்சட்ட எண்ணை தேர்ந்தகடுக்கொள்ளும் வகையில் இந்த ஏலம் நடைபெற்றது.

ஜாவா பைக்குகள் ஏலம்

மும்பையில் நேற்றைக்கு ஏலம் விடப்பட்ட 13 மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையிலும் நடைபெற்றதில், அதிகபட்சமாக சேஸ் நெ. 1 க்கு அதிகபட்சாக 45 லட்சம் கொடுத்து ஒருவர் பெற்றுள்ளார். குறைந்தபட்ச ஏல தொகையாக சேஸ் நெ. 7 க்கு 5 லட்சமாகும்.

Jawa-Side

13 பைக்குளின் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை அடிப்படையில் இந்த பட்டியலை காணலாம்.

வ.எண்

சேஸ் எண் (Chassis)

ஏல தொகை

1

1

ரூ. 45 லட்சம்

2

17

ரூ. 17 லட்சம்

3

5

ரூ.11.75 லட்சம்

4

24

ரூ. 10.5 லட்சம்

5

3

ரூ. 10.25 லட்சம்

6

99

ரூ. 7.5 லட்சம்

7

52

Rs 7.25 லட்சம்

8

13

ரூ. 6.25 லட்சம்

9

26

ரூ. 6 லட்சம்

10

18

ரூ. 6 லட்சம்

11

11

ரூ. 5.5 லட்சம்

12

77

ரூ. 5.25 லட்சம்

13

7

ரூ. 5 லட்சம்

இவ்வாறு ஏலத்தில் விடப்பட்ட பைக்குகளின் மூலம் 1 கோடியே 43 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட நிதியானது கொடி நாள் நிதியாக இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த பைக்கினை ஏலத்தில் எடுத்தவர்களுக்கு பல்வேறு கஸ்டமைஸ் ஆப்ஷன் மற்றும் சர்வீஸ் பேக்குகளை ஜாவா வெளியிட உள்ளதாக தெரிகின்றது.

மேலும் வாசிக்க ;- ஜாவா பைக் பற்றி படிக்கலாம்

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Jawa-Forty-Two-Price

Tags: Jawaஜாவா மோட்டார்சைக்கிள்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version