Categories: Bike News

50,000 ஜாவா பைக்குகளை விற்பனை செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸ்

c9aef jawa forty two price

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் 50,000 கடந்த சாதனை படைத்துள்ளது.

இந்திய சந்தையில் ஜாவா நிறுவனம், ஜாவா, ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா பெராக் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. கடந்த 12 மாதங்களில் கோவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நாடு முழுவதும் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் டிசம்பர் 2020 இறுதிக்குள் நாடு முழுவதும் தனது டீலர்களின் எண்ணிக்கையை 205 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் டெலிவரி வழங்கப்பட்ட பாபர் ஸ்டைல் ஜாவா பெராக் 2000 யூனிட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜாவா நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் மற்றும் நேபாளத்திற்கு பைக்குகளை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 ஆகியவை விளங்குகின்றது.

web title : Jawa motorcycle sales achieves 50000 units in India