ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பைக் 500 OHV அறிமுகம் செய்து 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு சிறப்பு எடிஷனை விற்பனைக்கு 90 எண்ணிக்கையில் வெளியிடுவதுடன் விரைவாக டெலிவரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செக் குடியரசில் தொடங்கப்பட்ட ஜாவா நிறுவனம் முதன்முறையாக 1929 ஆம் ஆண்டில் முதல் பைக் மாடலாக 499 சிசி என்ஜினை பெற்றிருந்த ஜாவா 500 OHV மாடலை வெளியிட்டது. முதல் மாடல் வெளியிட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் 90 யூனிட்டுகளை மட்டும்.
இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.
விலை உட்பட கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஜாவா ஆண்டுவிழா பதிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் உடனடி விநியோகத்திற்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அதற்காக, வாடிக்கையாளர்கள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் 22, 2019 க்கு முன் ஒன்றை புக்கிங் செய்ய வேண்டும். இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் இந்த பிராண்ட் முதல் வருட செயல்பாடுகளை நிறைவு செய்வதால், டெலிவரி முதல் வருட கொண்டாட்டத்தில் தொடங்கலாம் எதிர்பார்க்கலாம்.
ஜாவா சிறப்பு பதிப்பு விலை விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக அமைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஜாவா பைக் விலை பட்டியல்
ஜாவா – ரூ. 1.64 லட்சம்
ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)