2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட 2020 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக் முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை பெற்று கடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.
2020 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்கில் 1301 சிசி, வி இரட்டை சிலிண்டர் என்ஜினுடன் திரவத்தால் குளிரூட்டப்பட்ட முறையில் இயக்கப்படுகிறது. இது 9500 ஆர்.பி.எம் சுழற்சியில் 180 ஹெச்பி பவர் மற்றும் 8000 ஆர்.பி.எம் சுழற்சியில் 140 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜினுடன் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 189 கிலோ எடையுடன் கூடுதலாக 16 லிட்டர் எரிபொருள் தொட்டியை பெறுகிறது. கே.டி.எம் பைக்கில் சமீபத்திய புதிய தலைமுறை, 6 அச்சு ஐ.எம்.யு கொண்ட லீன் ஏங்கிள் இழுவைக் கட்டுப்பாடு மற்றும் அனைத்து விதமான ரைடிங் முறைகளிலும் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் பிரேக்குகள் ப்ரெம்போ ஸ்டைல்மா 4 பிஸ்டன் மோனோபிளாக் காலிபர்ஸ் மற்றும் இரண்டு 320 மிமீ பிரேக் டிஸ்க்குகள், பின்புறம் 240 மிமீ டிஸ்க் கிடைக்கிறது.