ரூ. 1.60 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200 பைக் மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் குறைந்த விலை அதாவது தொடக்கநிலை மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற டியூக் 200 ஸ்போர்ட்டிவ் சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக விளங்குகின்றது. வருகின்ற 2019 ஏப்ரல் முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி திறன் கொண்டு பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் , 125 சிசிக்கு குறைவான பைக்குகளில் சிபிஎஸ் பிரேக் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.
விற்பனையில் உள்ள மாடலின் வசதியில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளாமல் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட ட்யூக் 200 பைக்கில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 24 BHP பவரையும், 19.6 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ட்ரெல்லிஸ் அடிச்சட்டத்தை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்பிலான ஃபோர்க்குடன், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்ற இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் இடம் பெற்றுள்ளது.
கேடிஎம் டியூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் – ரூ.1.60 லட்சம்