அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின்  சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முழுமையாக வெளியாகியுள்ளது. முழுவதும் உற்பத்தி நிலை எட்டியுள்ள 390 டியூக்கில் சக்திவாய்ந்த என்ஜின் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

2023 KTM 390 Duke

2023 கேடிஎம் 390 டியூக் பைக்கின் தோற்றம் விற்பனையில் உள்ள மாடலை விட மிக ஆக்ரோஷமாக தோற்றமளிக்கின்றது. இது “டியூக்” பெயர் மிக பெரிதான எழுத்துகளுடன் பெட்ரோல் டேங்க்  நீட்டிப்புகளில் கொண்டுள்ளது. நிச்சயமாக, ஆரஞ்சு நிறத்தை பெற்ற  ட்ரெல்லிஸ் ஃபிரேம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் T வடிவ டெயில் லைட். ஸ்பிளிட் இருக்கை, புதிய கைப்பிடி மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கண்ணாடிகள் பெற்றுள்ளது.

முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஃபோர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. TFT டேஷ் ஆகியவை புத்தம் புதிய யூனிட்களாக இருக்கலாம். மிக முக்கிய வசதியாக IMU, ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெறும்.

அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதி மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

image source