விற்பனையில் உள்ள 790 டியூக் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கேடிஎம் 890 டியூக் ஆர் பைக்கில் 890 சிசி இணை இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் தற்பொழுது கிடைக்கின்ற 790 டியூக்கிற்கு மாற்றாக நிலை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
890 சிசி, இணை இரட்டை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 121 ஹெச்பி பவரையும், 99 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 790 டியூக்கின் மோட்டரிலிருந்து 15 பிஹெச்பி மற்றும் 14 என்எம் கூடுதலாகும். இரட்டை 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட ப்ரெம்போ ஸ்டைல்மா காலிபர்ஸ் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் கொண்ட ப்ரெம்போ ஃப்ளோட்டிங் காலிபர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 890 டியூக் 790 டியூக்கை விட 3 கிலோ எடை குறைவாக உள்ளது. மேலும், அதிக கிரவுண்ட் கிளியரண்ஸ் மற்றும் இருக்கை உயரத்தையும் கொண்டுள்ளது.
890 டியூக் ஆர் மாடலில் லீன் ஏங்கிள், கார்னரிங் ஏபிஎஸ், வீலி கன்ட்ரோல், சூப்பர் மோட்டோ மோட் உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ளது. அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்ட பின்புற சப் ஃப்ரேம் மற்றும் டை காஸ்ட் அலுமினியம் ஓபன் லேட்டிஸ் ஸ்விங்கார்ம் கொண்டுள்ளது. அல்ட்ரா லைட்வெயிட் குரோம் மாலிபென்டிம் ஸ்டீல் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது. இந்த பைக்கில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய WP APEX 43 மிமீ கார்ட்ரிட்ஜ் இட்வெர்டேட் ஃபோர்க் மற்றும் சரிசெய்யக்கூடிய WP APEX மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
கேடிஎம் 890 டியூக் ஆர் அடுத்த ஆண்டு இந்தியாவில் 790 டியூக்கை மாற்றாக விற்பனைக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க – புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் விபரம்