Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

by automobiletamilan
June 12, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

ktm emotion escooter

ஐரோப்பாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் முதன்முறையாக கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ மூலம் தயாரிக்கப்பட்டு சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே கேடிஎம் நிறுவனம் கான்செப்ட் நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது. இந்த பேட்டரி மின்சார ஸ்கூட்டர் கேடிஎம் அல்லது ஹஸ்குவர்னா பிராண்டில் எதிர்பார்க்கலாம்.

KTM Escooter

கேடிஎம் அல்லது ஹஸ்குவர்னா பிராண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ளதாக உள்ளது. ஏற்கனவே ஹஸ்குவர்னா பிராண்டில் வெக்டோர் என்ற கான்செப்ட் நிலை மின்சார ஸ்கூட்டர் காட்சிப்படுத்தபட்டது.

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. டிசைன் வடிவமைப்பினை பார்க்கும்பொழுது கேடிஎம் பைக்குகளுக்கு உரித்தான பல்வேறு அம்சங்களை பரவலாக பெற்றுள்ளது.

ktm escooter spied

சோதனை ஓட்டத்தில் உள்ள உள்ள ஹஸ்குவர்னா ஸ்கூட்டரில் பேட்டரி பேக் ஆனது ஃபுளோர் போர்டுக்கு கீழே உள்ளது.  சிறப்பான சிறந்த கையாளுதல் கிடைக்கும் வகையில் கீழே உள்ளது. ஸ்விங்கார்ம் அனைத்தும் அலுமினியம் ஆக வழங்குப்பட்டுள்ளதால் இது பொதுவாக கேடிஎம் பைக்குகளில் காணப்படும் அணுகுமுறையாகும். ஸ்விங்கார்மில் ஒரு அலுமினிய தகடு இணைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் மின்சார ஸ்கூட்டரின் இரண்டு விதமான வேரியண்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறிய ஸ்கூட்டர் வகைக்கு 4 kW (5.5 hp) மற்றும் அதிகபட்ச வேகம் 45 km/h மற்றும் அடுத்த அதிக சக்திவாய்ந்த வேரியண்ட் 8 kW (11 hp) மாடல் 100 km/h அதிகபட்ச வேகம் கொண்டிருக்கலாம். இரண்டும் மாடலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100-150km/charge கொண்டிருக்கலாம்.

மற்றபடி, ஒற்றை இருக்கை, இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக், அலாய் வீல், பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் எல்இடி விளக்குகள் உடன் ஒரு பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் காணலாம்.

2025 ஆம் ஆண்டில் கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையிலும் விற்பனைக்கு சேட்டக் வெளியிட வாய்ப்புள்ளது.

ktm escooter spied

ktm escooter ktm escooter spied rear view

ktm escooter

image source

Tags: Electric ScooterKTM Escooter
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan