இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய AIS-156 Amendment-3 பேட்டரி பேக் விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஓகினவா OKHI-90 மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 160 கிமீ ரேன்ஜ் வழங்குகின்றது.
Okinawa OKHI-90
Okhi-90 ஸ்கூட்டரில் மேம்படுத்தப்பட்ட மோட்டார், உள்ளமைக்கப்பட்ட புதிய நேவிகேஷன் அமைப்பு, புளூடூத் இணைப்பு, அழைப்பு மற்றும் அறிவிப்பு எச்சரிக்கைகள், கடிகாரம் மற்றும் இசை அறிவிப்புகளுடன் வண்ண டிஜிட்டல் கிளஸ்ட்டர் வருகிறது. கூடுதலாக, 2023 Okhi-90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது மொபைல் ஆப் இணைப்பை வழங்குகிறது.
மேக்ஸி ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான OKHI-90 அதிகபட்சமாக 80-90Kmph வரை வெளிப்படுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 160 KM/Charge சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டு 16 அங்குல வீல் பெற்றுள்ளது.
ஒகினவா ஒகி-90 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,86,006 ஆகும்.
Okinawa OKHI-90 Specification | |
Battery pack | 3.6 kWh |
Top Speed | 80-90 km/h |
Range (IDC claimed) | 160 km |
Real Driving Range | 100-120 km |
Charging Time | 5-6 hrs |
Riding modes | Eco, Reverse |