ராயல் என்ஃபீல்டு நிறுவனம், குறைந்த விலை புல்லட் 350, புல்லட் 350ES என இரு மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 என்ற குறைந்த விலை கிளாசிக் மாடலில் க்ரோம் பாகங்கள் நீக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு ரூபாய் 1.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் முதல் தொடர் சரிவினை சந்தித்து வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்ஐக்கிள் நிறுவனம், விலை குறைக்கப்பட்ட மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 மற்றும் புல்லட் 350 ES என இரு மாடல்களிலும் குறைந்த க்ரோம் பாகங்கள் மற்றும் சாதாரன பேட்ஜ் பெற்று ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 பைக்கில் விலை குறைக்கப்பட்ட மாடல் ஒன்றை இரு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
புதிய கிளாசிக் 350 S என்ற வேரியண்டில் ப்யூர் பிளாக் மற்றும் மெர்குரி சில்வர் என இரு நிறங்களை பெற்றிருக்கும். கருப்பு நிறத்தில் என்ஜின், வீல், கிராபிக்ஸ் ஸ்டைல் பெற்ற லோகோ மற்றும் பேட்ஜ், டேங்க் கிரிப் ஆனது நீக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் 350 மாடலில் 346சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 19.8hp பவரையும், 28Nm டார்கையும் வழங்கும் ஏர் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலின் விலை ரூ.1.54 லட்சம் ஆனால் ரூ.9,000 விலை குறைக்கப்பட்டு புதிய கிளாசிக் 350 எஸ் ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) விலையில் வந்துள்ளது.