உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதனால் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விலையை ரூபாய் 1500 வரை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது. தனது அனைத்து மாடல்களையும் உயர்த்தியிருந்தாலும் 650 ட்வின்ஸ் பைக்குகள் விலை உயர்த்தப்படவில்லை.

என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 மாடலில் ஏபிஎஸ் பிரேக் விரைவில் இணைக்கப்பட உள்ளது.

அனைத்து டீலர்களும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் முந்தைய விலையை விட ரூபாய் 1500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டீலர்கள் குறிப்பிட்ட காரணம் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் என்ஃபீல்ட் விலை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

ராயல் என்ஃபீல்ட் பைக் விலை பட்டியல்

மாடல் பழைய விலை புதிய விலை
புல்லட் 350 STD ரூ. 1,16,207 ரூ 1,17,660
புல்லட் 350 ES ரூ. 1,32,511 ரூ. 1,33,964
புல்லட் 500 ABS ரூ. 1,86,685 ரூ. 1,88,141
கிளாசிக் 350 ரெட்டிச் ABS ரூ. 1,51,793 ரூ. 1,53,245
கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ABS ரூ. 1,53,629 ரூ. 1,55,082
கிளாசிக் 500 ABS ரூ. 1,99,928 ரூ. 2,01,315
கிளாசிக் 500 க்ரோம் ABS ரூ. 2,10,361 ரூ. 2,11,817
தன்டர்பேர்டு 350 ABS ரூ. 1,54,547 ரூ. 1,56,000
தன்டர்பேர்டு 500 ABS ரூ. 2,05,189 ரூ. 2,06,645
தன்டர்பேர்டு 350X ABS ரூ. 1,61,893 ரூ. 1,63,346
தன்டர்பேர்டு 500X ABS ரூ. 2,13,061 ரூ. 2,14,516
ஹிமாலயன் ABS ரூ. 1,78,833 ரூ. 1,80,289
ஹிமாலயன் Sleet ABS ரூ. 1,80,670 ரூ. 1,82,125

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், விரைவில் புதிய புல்லட் ட்ரையல் 350 மற்றும் புல்லட் ட்ரையல்ஸ் 500 பைக் மாடல்களை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது. ஜாவா நிறுவனத்தின் வருகையால் என்ஃபீல்ட் விற்பனை மந்தமடைந்துள்ளது.