2019 இஐசிஎம்ஏ கண்காட்சியில் புதிதான மூன்று நிறங்களை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் புதிய நிறத்துடன் பாரத் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினுடன் விற்பனைக்கு வெளியாகலாம்.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் ‘கிராவல் கிரே’ என்ற வண்ணத்தில் தோற்றமுடைய மேட் பெயிண்டை டேங்க் மற்றும் ஃபென்டர்களில் இந்த நிறத்தை ப் பெற்று மீதமுள்ள மோட்டார் சைக்கிள் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. அடுத்ததாக ‘ராக் ரெட்’ மற்றும் ‘லேக் ப்ளூ’. இப்போது ராக் ரெட் நிற மாடலின் எரிபொருள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லேக் ப்ளூ வெள்ளை மற்றும் நீல நிறத்தையும். கூடுதலாக, இந்த இரண்டு வண்ணங்களிலும் பிரேம் கார்டு மற்றும் கிராப் ரெயில்கள் மாடலுக்கு ஏற்ற நிறத்தைப் பெற்றுள்ளது.
இந்த மாடல் , ஃப்யூவல் இன்ஜெக்ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்போது புதிய நிறங்களுடன் பிஎஸ் 6 மேம்பாட்டை கொண்டிருக்கும்.
image source – Travelmoto youtube