ரூ.99,999 விலையில் சிம்பிள் எனர்ஜி அறிமுகம் செய்துள்ள புதிய டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்ரோடு விலை உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
முன்பாக இந்நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற ஸ்கூட்டரை அதிகபட்சமாக 212 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் ரூ.1.58 லட்சத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனம் தற்பொழுது வரை தொடர்ந்து முன்பதிவு மற்றும் டெலிவரி மேற்கொள்ளாமல் உள்ளது.
Simple Dot One Escooter
தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள சிம்பிள் ஒன் பேட்டரி மின்சார ஸ்கூட்டரை போலவே அமைந்திருக்கின்றது. டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே நிகழ் நேரத்தில் 120-130 கிமீ வரை வழங்க வாய்ப்புள்ளது.
டாட் ஒன் ஸ்கூட்டர் மாடலில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ளது.
Eco, Ride, Dash மற்றும் Strove என நான்கு விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ள மாடல் 0-80 % சார்ஜிங் செய்ய வீட்டு சார்ஜர் மூலம் 3 மணி நேரம் 47 நிமிடமும், ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-80 % பெற நிமிடத்திற்கு 1.5 கிமீ என்ற வேகத்தில் சார்ஜ் ஆகும். 750W சார்ஜருடன் வருகின்றது.
நிறங்கள் மற்றும் வசதிகள்
கருப்பு, வெள்ளை, நீளம், சிவப்பு, பிரேசன் X, மற்றும் லைட் X என 6 விதமான நிறங்களை பெற்றுள்ள இந்த மாடலில் இருபக்கமும் CBS பிரேக் உடன் முன்புறத்தில் 200mm மற்றும் 190mm பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு 90/90 டியூப்லெஸ் டயர் கொண்ட 12-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.
7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகள் மூலம் அழைப்பு/SMS விழிப்பூட்டல்கள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், பார்க்கிங் உதவி மற்றும் பேட்டரி ரேஞ்ச் மற்றும் செயல்திறன் கண்காணிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
35 லிட்டர் கொள்ளளவு வசதியை இருக்கைக்கு அடியில் பெற்றுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆனது 164.5 மிமீ பெற்று கர்ப் எடை 126 கிலோ ஆகும்.
பெங்களூருவில் மட்டுமே முதன்முறையாக சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.99,999 (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுக சலுகையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிம்பிள் டாட் ஒன் விலை ரூ.1.40 லட்சம் ஆகும்.
ஜனவரி 1, 2024 முதல் ஏற்கனவே சிம்பிள் ஒன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் டாட் ஒன் மாடலுக்கு மாற்றிக் கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1947 முன்பதிவு கட்டணமாக செலுத்தி ஜனவரி 27, 2024 முதல் அனைவரும் முன்பதிவு செய்யலாம்.