இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பிரிமியம் மாடலாக 250சிசி என்ஜின் பெற்ற சுசுகி ஜிக்ஸர் 250 விற்பனைக்கு மே 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முதற்கட்டமாக நேக்டு வெர்ஷன் அல்லது முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட சுசுகி ஜிக்ஸர் SF 250 மாடலை விற்பனைக்கு இந்நிறுவனம் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.ஜிக்ஸர் 150 வெற்றியை தொடர்ந்து இந்த புதிய மாடல் வெளியாகின்றது. விற்பனையில் உள்ள யமஹா FZ25, ஃபேஸர் 25 மாடலுக்கு நேரடியான போட்டியாக விளங்கும் என கருதப்படுகின்றது.
சுசுகி ஜிக்ஸர் 250 பைக்கின் எதிர்பார்ப்புகள்
ஜப்பானை தலைமையிடமாக கொண்ட சுசுகி நிறுவன விற்பனை சில வருடங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சுஸூகி ஆக்செஸ் ஸ்கூட்டர் மற்றும் ஜிக்ஸர் வரிசை நல்லதொரு வளர்ச்சியை இந்நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
ஆனால் இந்த மோட்டார்சைக்கிள் பற்றி எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகத நிலையில் இந்த பைக் இந்நிறுவனத்தின் பிரபலமான பிரிமியம் ரக மாடல்களான GSX-S750 மற்றும் GSX-S1000 தோற்ற உந்துதலை பின்புலமாக கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.
இந்தியாவில் மே 20, 2019-ல் விற்பனைக்கு புதிய பைக் ஒன்றை சுசுகி வெளியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது.