Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.98,340 விலையில் சுசூகி இண்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
November 7, 2017
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

suzuki intruder bike launchedரூ.98,340 விலையில் சுசூகி இண்ட்ரூடர் 150 பைக் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரூஸர் ரக பிரியர்களுக்கு ஏற்ற மிகவும் நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக இண்ட்ரூடர் அமைந்துள்ளது.

சுசூகி இண்ட்ரூடர் 150

Suzuki Intruder 150 Side

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அவென்ஜர், தண்டர்பேர்டு, ரெனேகேட் ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் வகையில் இந்திய மாடர்ன் க்ரூஸர் என்ற கோஷத்துடன் இன்ட்ரூடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள பிரிமியம் ரக இண்ட்ரூடர் M800 மற்றும் M1800 ஆகிய மாடல்களின் தோற்ற வடிவமைப்பை பெற்றிருப்பதுடன், ஜிக்ஸெர் வரிசை மாடலில் இடம்பெற்று எஞ்சின் அமைப்பை பெற்றதாக அமைந்துள்ளது.

2130 மிமீ நீளம், 805 மிமீ அகலம் மற்றும் 1095 மிமீ உயரம் கொண்டுள்ள இன்ட்ரூடர் 150 பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ பெற்றதாகவும், 1405 மிமீ வீல்பேஸ் கொண்டதாகவும் , 17 அங்குல் வீல் பெற்றதாக இன்ட்ரூடர் வெளிவந்துள்ளது.

Suzuki Intruder 150 Front Quarter

முன்புறத்தில் புராஜெக்டர் எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள், டிஜிட்டல் இண்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் கூடிய  நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான தன்மையை கொண்ட இரட்டை பிரிவு இருக்கை அமைப்பை பெற்றதாக விளங்குகின்றது.

இண்ட்ரூடர் எஞ்சின்

ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF  பைக்குகளில் இடம்பெற்றுள்ள இதே எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

Suzuki Intruder 150 Rear Quarter

 

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இருபுற சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருப்பதுடன், முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் அம்சத்துடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளது.

சுசூகி இண்ட்ரூடர் 150 பைக் விலை ரூ.98,340 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Suzuki Intruder 150 Instrument ClusterSuzuki Intruder 150 front disc

Suzuki Intruder 150 Rear View

Tags: Intruder bikeSuzukiSuzuki intruder 150சுசூகி இண்ட்ரூடர்சுசூகி இண்ட்ரூடர் 150
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version