விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மோட்டார்சைக்கிள்களின் விற்பனை வளர்ச்சி சதவீதத்தை காட்டிலும் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 2018 மாதந்திர விற்பனை முடிவில் டாப் 10 பைகுகள் – ஏப்ரல் 2018 பற்றி அறிவோம்.

டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018

கடந்த மார்ச் மாத முடிவில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை குறைந்திருந்த நிலையில், தற்போது ஆக்டிவா ஸ்கூட்டர் 3,39,878 எண்ணிக்கையில் விற்பனை ஆகி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் தொடர்ந்து சீரான விற்பனை வளர்ச்சியை கண்டு வருகின்றது.

முதல் 10 பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் 125 சிசி ரக சிபி ஷைன் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் சிடி 100 பைக் 9 வது இடத்தை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் , பேஸன் , கிளாமர் ஆகிய பைக் மாடல்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எல் சூப்பர் ஆகிய மாடல்களும் இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து டாப் 10 இடங்களில் இடம்பிடித்து வந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இந்த முறை பட்டியிலில் இடம்பெற தவறியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து முழுமையான 2018 ஏப்ரல் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018

வ.எண்மாடல்ஏப்ரல் 2018மார்ச் -2018
1ஹோண்டா ஆக்டிவா3,39,8782,07,536
2ஹீரோ ஸ்பிளென்டர்2,66,0672,62,232
3ஹீரோ HF டீலக்ஸ்1,72,3401,83,162
4ஹோண்டா CB ஷைன்1,04,04881,770
5ஹீரோ பேஸன்95,8341,05,214
6ஹீரோ கிளாமர்69,90072,054
7பஜாஜ் பல்சர் வரிசை67,71253,507
8டிவிஎஸ் XL சூப்பர்67,70878,413
9பஜாஜ் CT59,94445,003
10டிவிஎஸ் ஜூபிடர்56,59965,308