இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரசத்தி பெற்ற ஏதெர் 450X Gen 3, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா S1 மற்றும் ஹீரோ வீடா வி1 ஆகியவற்றின் தமிழ்நாடு ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா தவிர மற்ற தொகுக்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட “தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023” அறிக்கையில் மின்னேற்ற நிலையங்களுக்கு ஊக்கச் சலுகைகள், பொது பேட்டரி மாற்று நிலையங்களுக்கு ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் ஆட்டோகளுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் E-2W மற்றும் E-4W வாகனங்களுக்கு வர்த்தக அனுமதிப் பத்திரங்களை வழங்குகிறது.
அரசின் அறிக்கைப்படி , எக்ஸ்ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்காது. ஆனால் வாகன காப்பீடு கட்டணம், டீலர்கள் வழங்குகின்ற ஆக்செரிஸ் போன்றவற்றை கொண்டு விலை மாறுபடும்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் முதன்மையானது பேட்டரி திறன், மோட்டார் வாரண்டி சார்ந்த அம்சங்களே, அதன் பிறகே ரேஞ்சு, டாப் ஸ்பீடு உள்ளிட்ட பிற அம்சங்களாகும்.
Ather 450X Gen3
பெங்களுரூவை தலைமையிடமாக கொண்ட ஏதெர் எனெர்ஜி நிறுவனம் 450 பிளஸ் மற்றும் 450X மாடலில் பல்வேறு மேம்பாடுகளை வழங்கி அறிமுகம் முதலே சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 0-100 சதவீத வீட்டு சார்ஜிங் முறையில் 5 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 450x பேட்டரிக்கு அதிகபட்சமாக 5 வருடம் அல்லது 60,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. வாகனத்திற்கான வாரண்டி 3 வருடம் அல்லது 30,000 கிமீ வழங்கப்படுகின்றது.
Ather 450X Gen 3 | |
Battery Capacity | 3.7 kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 6.2 kW |
Torque (Nm) | 26 Nm |
Top Speed | 90 km/hr |
Real Range (km) | 110 km (Eco) |
Modes | Warp, Sport, Ride, Eco, SmartEco |
Acceleration (0-40Km) | 3.3 Secs |
புதிய ஏதெர் 450X Gen 3 மின்சார ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,23,480 (பிளஸ்) முதல் ₹ 1,52,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
2023 TVS iQube
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று வேரியண்டுகள் கிடைக்கின்றது. ST வேரியண்டிற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 0-80 சதவீத வீட்டு சார்ஜிங் முறையில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
TVS iQube S | |
Battery Capacity | 3.04 kWh |
Motor Type | BLDC hub mounted |
Power (kW) | 4.4 kW |
Torque (Nm) | 33 Nm |
Top Speed | 78 km/hr |
Real Range (km) | 105 km (Eco) |
Modes | Eco, Power |
Acceleration (0-40Km) | 4.2 Secs |
புதிய ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,14,936 (பிளஸ்) முதல் ₹ 1,21,057 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
2023 Bajaj Chetak
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் மாடல் அதிகபட்சமாக 0-100 சதவீத சார்ஜிங் ஏற 5 மணி நேரம் ஆகும். இந்நிறுவனம் அதிகபட்சமாக 3 வருடம் அல்லது 50,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது.
Bajaj Chetak | |
Battery Capacity | 2.88 kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 4.2 kW |
Torque (Nm) | 20 Nm |
Top Speed | 63 km/hr |
Real Range (km) | 102 km (Eco) |
Modes | Eco, Sports, Reverse |
Acceleration (0-40Km) | 4.4 Secs |
புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,60,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
Ola S1 Pro
இந்திய சந்தையில் அதிகம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்ற முதன்மையான நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் விளங்குகின்றது. தொடர்ந்து மாதம் 10,000 க்கு மேற்பட்ட வாகனங்களை டெலிவரி வழங்குகின்றது. 0-100 சதவீத சார்ஜிங் செய்ய 6 மணி நேரம் 30 நிமிடங்கள் போதுமானதாகும். அதிகபட்சமாக 5 வருடம் அல்லது 60,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது.
Ola S1 Pro | |
Battery Capacity | 4 kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 8.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 116 km/hr |
Real Range (km) | 125 km (Eco) |
Modes | Eco, Normal, Sports & Hyper |
Acceleration (0-40Km) | 2.9 Secs |
புதிய ola நிறுவனம் S1, S1 Air, S1 Pro என மாறுபட்ட வேரியண்டுகளை கொண்டுள்ளதால் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 93,480 (பிளஸ்) முதல் ₹ 1,41,700 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
Vida V1
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா பிராண்டில் வந்துள்ள V1 தற்பொழுது டெல்லி, பெங்களுரூ மற்றும் ஜெயப்பூரில் மட்டும் கிடைக்கின்றது. சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விரைவில் எதிர்பார்க்கலாம். 0- 80 சதவீத சார்ஜிங் செய்ய 5 மணி நேரம் 55 நிமிடங்கள் தேவைப்படும்.
Hero Vida V1 | |
Battery Capacity | 3.94 kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 3.9 kW |
Torque (Nm) | 25 Nm |
Top Speed | 80 km/hr |
Real Range (km) | 85 km (Eco) |
Modes | Eco, Ride, Sport, Custom |
Acceleration (0-40Km) | 3.2 Secs |
ஹீரோ Vida V1 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ₹ 1,28,350 முதல் ₹ 1,48,824 வரை.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகும். விலை விபரம் அனைத்தும் தோராயமானதாகும்.
last updated – 06-05-2023