டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உயர்ரக மாடலாக விளங்குகின்ற அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடல் ஜனவரி 30 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.
விற்பனையில் இருக்கும் மாடலை விட கூடுதலாக இரு நிறத்தில் பாடி கிராபிக்ஸ், இது தவிர சில பெர்ஃபாமென்ஸ் மேம்பாடுகளுடன், மாற்றியமைகப்பட்ட TFT கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்துடன் கூடிய இந்நிறுவன ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் போன்றவற்றை பெற உள்ளது.
மற்றபடி வழக்கமான அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலில் 313 சிசி என்ஜினை பெற உள்ளது. இந்த என்ஜின் பவர் சற்று குறைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. பிஎஸ் 4 முறையில் அதிகபட்சமாக 34 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் இடம்பெற்றிருக்கின்றது. மேலதிக விபரங்கள் ஜனவரி 30 ஆம் தேதி வெளிவரும் இணைந்திருங்கள்.