Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
பிப்ரவரி 2, 2018
in பைக் செய்திகள்

இந்தியாவில் ரூபாய்1,07,485 விலையில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற  டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS கார்புரேட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS

தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், ஏபிஎஸ் ஸ்டிக்கரை மட்டுமே பெற்ற அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

அப்பாச்சி 200 ஏபிஎஸ் மாடலில் இடம்பெற்றுள்ள டூயல் சேனல் ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்குவதுடன், இந்த பிரேக்கில் இடம்பெற்றுள்ள Rear Wheel Lift-off Protection (RLP) எனப்படும் அம்சம் மிக கடுமையான பிரேக்கிங் சமயத்தில் பின்புற சக்கரம் பூட்டிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் செயல்படும்.

முன்புறத்தில் 270மிமீ பிடெல் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக்ப் ஃபோர்க்குகள் பின்பக்கத்தில் மோனோசாக் கேஸ் சாக் அப்சார்பருடன் ஸ்பீரிங் கொடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் விற்பனைக்கு வந்த அப்பாச்சி பைக்கில் ரெமோரா டயர் அல்லது பைரேலி டயர் என இரண்டிலும் கிடைத்து வந்த நிலையில், தற்போது கார்புரேட்டர் மாடலில் மட்டுமே ஏபிஎஸ் பிரேக் வழங்கப்படுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS பைக் விலை ரூ. 1,07,485 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: TVS ApacheTVS Motorsஅப்பாச்சி 200அப்பாச்சி RTR 200 4V ABSடிவிஎஸ் அப்பாச்சி
Previous Post

மாருதி சுசுகி கார் விற்பனை 5 % வளர்ச்சி பெற்றுள்ளது – ஜனவரி 2018

Next Post

இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 விற்பனைக்கு வந்தது

Next Post

இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 விற்பனைக்கு வந்தது

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version