டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜுபிட்டர் ஸ்கூட்டர் வகையில் புதிய படைப்பாக சிறப்பு எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் “ஜுபிட்டர் கிராண்ட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர்களில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டவை 55 ஆயிரத்து 936 ரூபாய் விலையிலும், டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டவை 59 ஆயிரத்து 648 ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. மேற்குறிய இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் ஸ்கூட்டர்களில் LED ஹெட்லைட் மற்றும் பொசிஷன் லேம்ப்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் எக்னோ மீட்டருடன் கூடிய டிஜிட்டல் அனலாக் மீட்டரையும் கொண்டுள்ளது. இந்த ஜுபிட்டர் கிராண்ட்டில் முதல் முறையாக டைமண்ட் கட் அலாய் வீல்களுடன், எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஷாக் அப்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்புகளுக்கான புக்கிங்கள் நாடு முழுவதிலும் உள்ள டிவிஎஸ் டீலர்ஷிப்களில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு ஸ்கூட்டர்கள், ஸ்டாரோலைட் ப்ளூ கலருடன் பிரிமியம் கிராஸ்-ஸ்டிச்டு மெரூன் சீட் மற்று மற்றும் கிராண்ட் பேட்ஜ் உடன் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி இதில் பீகி பேணல்கள், பாடி கலரில் பில்லியன் ஹேண்டில் மற்றும் குரோம் ஹைலைட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது, இந்த ஸ்கூட்டரை அதிக அழகு நிறைந்ததாக மாற்றியுள்ளது என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு குறித்து பேசிய டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் துணைத்தலைவர் அனிருத்த ஹால்டர், வாடிக்கையாளர்களுக்காக ஆண்டுதோறும் நாங்கள் புதிய பிரான்ட் தீம்-ஐ உருவாக்கி வருகிறோம். இந்தாண்டுகான தீம் “பெற்றோர்கள்” என்று அழைக்கப்பட்படுகிறது. பெற்றோர் தனது குழந்தைகளை பார்த்து கொல்வதில் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளதை குறிக்கும் வகையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை தெரிந்து கொள்ள இந்த ஸ்கூட்டரை ஒட்டி பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.