மிக ஸ்போர்ட்டிவான டிசைன் வடிவமைப்பினை பெற்ற டிவிஎஸ் X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.2.50 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரடியான போட்டியாளர்கள் இந்த மாடலுக்கு இல்லை என்றாலும் ரேஞ்சு மிக குறைவாக 140 கிமீ மட்டுமே அமைந்துள்ளது.
2018-ல் காட்சிப்படுத்தப்பட்ட க்ரியோன் கான்செப்ட்டினை உற்பத்தி நிலைக்கு மிக நேர்த்தியாக எடுத்து சென்றுள்ளதை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை பாராட்டியே தீர வேண்டும்.
TVS X escooter
முதன்முறையாக ஏபிஎஸ் பெற்ற இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் வந்துள்ள டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரில் முதன்முறையாக பல்வேறு அம்சங்களை பெற்ற மாடலாக வந்துள்ளது. இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள டிவிஎஸ் நிறுவனம், குறிப்பாக ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் போன்ற சந்தைகளுக்கு டிவிஎஸ் X மாடலை விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளது.
TVS X டிசைன்
XLeton பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ் மாடல் போல்ட்-ஆன் பின்புற சப்ஃப்ரேம் கொண்ட அலுமினிய சேஸ் பெற்றதாக அமைந்துள்ளது. வழக்கமான ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ள ஃபுளோர் போர்டில்லாமல் வடிவமைக்கப்பட்டு ஃபிரேம் ஆனது வெளியே தெரியும் வகையில் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் ஆஃப்செட் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்ற எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டரில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 195 மிமீ டிஸ்க் உள்ளது. 12 அங்குல அலுமினிய அலாய் வீலின் முன்புறத்தில் 100/80-12 மற்றும் பின்புறத்தில் 110/80-12 டயர் உள்ளது. 1285 மிமீ வீல்பேஸ் கொண்ட டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 175 மிமீ மற்றும் இருக்கை உயரம் 770 மிமீ ஆக உள்ளது.
X பெர்ஃபாமென்ஸ்
டிவிஎஸ் X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 3.8 Kwh பேட்டரி மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்பட உள்ளது. இந்த மாடலில் ராம் காற்று மூலம் குளிரூட்டப்பட்ட 7 kW (9.38 bhp) மின்சார மோட்டார் அதிகபட்சமாக 11 kW (14.75 bhp) , தொடர்ச்சியாக 7 கிலோவாட் வழங்குகின்றது. டார்க் 40 Nm ஆக உள்ளது. 0-40 kmph வேகத்தை எட்டுவதற்கு 2.6 வினாடிகள் போதுமானதாகும். டிவிஎஸ் எக்ஸ் டாப் ஸ்பீடு 105 kmph ஆக உள்ளது.
எக்ஸ் மாடலில் Xtealth, Xtride மற்றும் Xonic என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. இவற்றில் Xonic மோடு அதிகபட்ச வேகத்தை எட்டும்.
X ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிமீ வரையிலான IDC (இந்தியன் டிரைவிங் சைக்கிள்) ரேஞ்சு கொண்டுள்ளது. எக்ஸ் ஹோம் ரேபிட் வேகமான 3 கிலோவாட் சார்ஜர் மூலம் 0-50 சதவீத சார்ஜிங்கை 50 நிமிடங்கள் போதுமானதாகும். 950W சார்ஜர் மூலம், 0-80 சதவீதம் சார்ஜ் ஆனது 4 மணி 30 நிமிடங்களில் தேவைப்படும்.
சிறப்பு வசதிகள்
10.25-இன்ச் TFT கிளஸ்ட்டரை பெறுகின்ற எக்ஸ் ஸ்கூட்டரில் ரைடருக்கு ஏற்றவாறு எந்த கோணத்திலும் சரிசெய்யப்படும் வகையில் X-tilt அம்சத்துடன் பிரமாண்டமான டேஷில் புளூடூத் இணைப்பு, இசையை கேட்கும் வசதி, வீடியோ பார்க்கவும், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள், வீடியோ கேம் ஆகியவற்றை வாகனத்தை நிறுத்தியிருக்கும் போது பயன்படுத்தலாம். நேவிகேஷன், விழிப்பூட்டல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
TVS X on-Road Price in Tamil Nadu
தமிழ்நாட்டில் டிவிஎஸ் எக்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,49,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலையில் அமைந்துள்ளதால் FAME 2 மானியத்தை எக்ஸ் இ-ஸ்கூட்டர் பெறாது. எனவே கூடுதலாக 950W சார்ஜரை ரூ.16,275 (ஜிஎஸ்டி வரி உட்பட) கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
அடுத்து டிவிஎஸ் அறிவித்துள்ள 3kW ஃபாஸ்ட் சார்ஜரின் விலை அறிவிக்கப்படவில்லை.
TVS X Electric scooter – ₹ 2,64,909 + 16,275 (950w charger)
டிவிஎஸ் எக்ஸ் தமிழ்நாடு அறிமுகம் எப்பொழுது ?
முதற்கட்டமாக, பெங்களூருவில் நவம்பர் இறுதியில் விநியோகம் துவங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் ஜனவரி 2024 மற்றும் கோவையில் மார்ச் 2024க்குள் கிடைக்க துவங்கும். மற்ற மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கு அடுத்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம். நாடு முழுவதும் 15 நகரங்களில் மார்ச் 2024-க்குள் கிடைக்க உள்ளது.