பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில், யமஹா மோட்டார் இந்தியா  நிறுவனம் சிறப்பு கேஷ் பேக் சலுகைகள் மற்றும் கவர்ச்சிகரமான நிதியுதவிகளை வழங்குகின்றது.

வாடிக்கையாளர்கள் 31 அக்டோபர் ‘2021 வரை இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். யமஹாவின் 125 சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும். தற்போது கேஷ் பேக் சலுகைகள் ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை
இந்தியாவில் கிடைக்கும். இதில் ஃபாசினோ 125 ஃபை (ஹைப்ரிட் + ஹைப்ரிட் அல்லாதது), ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர், ஸ்ட்ரீட் ரேலி 125  (ஹைப்ரிட் + ஹைப்ரிட் அல்லாதது) ஆகியவை அடங்கும்.