யூலு நிறுவனம் முதன்முறையான தனிநபர் பயன்பாட்டிற்கு என வின் (Yulu Wynn) எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனைக்கு ₹ 55,555 அறிமுக விலையில் வெளியிட்டுள்ளது. Wynn ஸ்கூட்டரின் ரேஞ்சு அதிகபட்சமாக 60 கிமீ வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு மட்டும் வாகனங்களை விற்பனை செய்து வந்த யூலு முதன்முறையாக தனிநபர் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் செய்ய யூமா பேட்டரி மாற்றும் மையங்களில் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.

 Yulu Wynn E-2wheeler

யூலு மற்றும் மேக்னா நிறுவனங்களின் கூட்டு முயற்சியான Yuma எனெர்ஜி நெட்வொர்க்கில் உள்ள எந்த பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனிலும் ஒரு நிமிடத்திற்குள் மின்கலனை மாற்றிக் கொள்ளக்கூடிய பேட்டரியை வின் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கு போர்ட்டபிள் சார்ஜர் கருவியை தனியாக வாங்கிக் கொள்ளலாம்.

யூமா பேட்டரி ஸ்வாப் மையங்களில் பேட்டரி மாற்றிக் கொள்ள மாதந்திர குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கப்படும். மாதந்தோறும் ரூ.499, ரூ.699 அல்லது ரூ.899 என ஏதேனும் ஒரே பேட்டரி ரீசார்ஜ் பேக்கினை தேர்வு செய்து கொள்ளலாம்.

சிவப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களை பெறுகின்ற Yulu Wynn பேட்டரி ஸ்கூட்டரின் வீல்பேஸ் 1200mm மற்றும் இருக்கை உயரம் 740mm மட்டுமே ஆகும். இரு பக்க டயர்களில் 110mm டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஸ்பிரிங் காயில் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 51W,19.3 Ah LFP பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 250W பவர் வெளிப்படுத்துகின்ற Wynn மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 24.9 கிமீ ஆகும். நிகழ்நேரத்தில் 45-50 கிமீ ரேஞ்சு கிடைக்க வாய்ப்புள்ளது.

Wynn Specification Yulu Wynn
Battery pack  51W,19.3 Ah LFP
Top Speed 24.9 km/h
Range (claimed) 68 km
Riding modes

Wynn ஸ்கூட்டருக்கு OTA அப்டேட், ரிமோட் அனுகல், 5 நபர்கள் வரை பயன்படுத்திக் கொள்ள கீலெஸ் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

குறைந்த வேகம் மற்றும் பவர் கொண்டுள்ள மாடல் என்பதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் Wynn ஸ்கூட்டரை ஓட்டலாம். வாகனத்தை பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர் விரும்பினால் வாகன காப்பீடு பெறலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற யூலு வின் ஸ்கூட்டரை yulu இணையதளத்தில் முன்பதிவு செய்ய கட்டணம் ரூ.999 ஆகும். முன்பதிவு கட்டணம் முழுமையாக திரும்ப பெறக்கூடியதாகும். அறிமுக சலுகையாக ஸ்கூட்டரின் விலை ரூ.4,444 வரை குறைவாக உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு பிறகு யூலு வின் ஸ்கூட்டர் விலை ரூ.59,999 ஆக கிடைக்கும்.