Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by MR.Durai
22 September 2025, 5:22 pm
in Honda Bikes
0
ShareTweetSend

2025 Honda dio 110cc

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 110cc ஸ்போர்ட்டிவ் டியோ ஸ்கூட்டர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Honda Dio 110

ஹோண்டா நிறுவனம் புதிதாக மேம்பட்ட நிறங்கள் மற்றும் எச் ஸ்மார்ட் எனப்படுகின்ற ரிமோட் கன்ட்ரோல் வசதி பெற்ற கீ கொண்டு அலாய் வீல் பெற்றதாக வந்துள்ளது. தொடர்ந்து டிரம் பிரேக் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.84hp மற்றும் 5,250rpm-ல் 9.03Nm டார்க் வழங்கும். கூடுதலாக OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

அன்டர் போன் ஃபிரேம் கொண்டுள்ள டியோ 110 ஸ்கூட்டர் மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1808 மிமீ, அகலம் 723 மிமீ மற்றும் உயரம் 1150 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1260 மிமீ பெற்று 160 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாக உள்ளது.

இருக்கை நீளம் 650 மிமீ மற்றும் 5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 103 கிலோ எடை கொண்டது. முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக மட்டும் வருகிறது.

டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 90/100-10 53J டயர் உள்ளது.

புதிய 4.2-இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.

DIO STD Rs.68,846

DIO DLX  Rs.79,732

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

2025 Honda Dio 110 on-Road Price in Tamil Nadu

ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • DIO STD- Rs.84,670
  • DIO DLX- Rs.96,456

(All Price On-road Tamil Nadu)

  • DIO STD – Rs.85,789
  • DIO DLX – Rs. 92,650

(All Price on-road Pondicherry)

2025 Honda dio 110 cluster

ஹோண்டா டியோ 110 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 47.000 x 63.121 mm
Displacement (cc) 109.51 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 7.8 hp (5.8 Kw) at 8000 rpm
அதிகபட்ச டார்க் 9.03 Nm  at 5,250 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் யூனிட் ஸ்விங்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/90-10 53J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-3Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 1808 mm
அகலம் 723 mm
உயரம் 1150 mm
வீல்பேஸ் 1260 mm
இருக்கை உயரம் 765 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 160 mm
எரிபொருள் கொள்ளளவு 5.3 litres
எடை (Kerb) 103 kg (Drum)
ஹோண்டா நிறங்கள்

தற்பொழுது டியோ மாடல் H-smart வேரியண்டில் மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக், மேட் டார்க் நீலம் மற்றும் இக்னியஸ் கருப்பு , இரண்டாவது டீலக்ஸ் வேரியண்ட்
மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மெட்டாலிக் மஞ்சள் மற்றும் மேட் சங்ரியா ரெட் மெட்டாலிக், இறுதியாக, ஸ்போர்ட்ஸ் ரெட், ப்ளூ மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக் என 7 நிறங்கள் உள்ளது.

2025 Honda dio 110cc
2025 Honda dio 110cc rear view
2025 Honda Dio 110 Rivals

டியோ ஸ்கூட்டருக்கு நேரடியான போட்டியாளர்களில் ஹீரோ ஜூம் 110 உள்ள நிலையில், அடுத்தப்படியாக, ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ பிளெஷர்+  மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 110 போன்ற மாடல்கள் உள்ளன.

ஹோண்டா டியோ vs ஜூம் 110 – ஒப்பீடு

Faq ஹோண்டா டியோ 110

2024 ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?

110சிசி என்ஜின் கொண்ட ஹோண்டா Dio 110 மைலேஜ் லிட்டருக்கு 48 Kmpl எதிர்பார்க்கலாம்.

ஹோண்டா டியோ 110 என்ஜின் பவர் & டார்க் ?

109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும்.

ஹோண்டா டியோ 110 ஆன்-ரோடு விலை?

டியோ 110 ஆன்-ரோடு விலை ரூ. 84,130 முதல் ரூ. 96,346 வரை

Related Motor News

ஹீரோ டெஸ்டினி 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

ரூபாய் 85,222 விலையில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு வெளியானது.!

110cc ஹோண்டா டியோ விற்பனைக்கு அறிமுகமானது

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 Honda Dio 110 Scooter Image Gallery
2025 Honda dio 110 cluster
2025 Honda dio 110cc
2025 Honda dio 110cc rear view

Last Updated -Price GST 2.0 tax structure 22/09/2025

Tags: 110cc ScootersHonda Dio
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new honda cb350c special edition brown

ஹோண்டா CB350C பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan