ராயல் என்ஃபீல்டின் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளில் முந்தைய ஹிமாலயன் 411 வெற்றியை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ஹிமாலயன் 450 ஆனது புதிய செர்பா 450 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.83 லட்சம் முதல் ரூ.2.98 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450 பைக் மாடலில் புதிதாக வழங்கப்பட்டுள்ள செர்பா 450 என்ஜின் மிக சிறப்பான வகையில் ட்யூன் செய்யப்பட்டு 452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
ரைட் பை வயர் சிஸ்டத்தை பெற்ற இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஈக்கோ ஏபிஎஸ் ஆன், ஈக்கோ ஏபிஎஸ் ஆஃப் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆஃப் போன்ற ரைடிங் மோடு ஆப்ஷனையும் பெறுகின்றது.
ட்வின் ஸ்பார் ஸ்டீல் ஃபிரேம் பெற்ற ஹிமாலயன் 450 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,245mm அகலம் 852mm மற்றும் உயரம் 1,316mm . அடுத்து வீல்பேஸ் 1510mm மற்றும் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 825mm ஆகவும் அட்ஜெஸ்ட் செய்யும் பொழுது 845mm ஆக உயர்த்தலாம்.
முன்புற டயரில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் அகலமான ரேடியல் 140/80 R17 அங்குல வீல் பெற்று பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும் கூடுதல் வசதியாக சுவிட்சபிள் ஏபிஎஸ் பயன்பாடு உள்ளது.
4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் பெற்றுள்ள பைக்கில் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் டிரிப்பர் நேவிகேஷன் ஆனது கூகுள் மேப்ஸ் உடன் இணைக்கப்பட்டும், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றது.
(ex-showroom TamilNadu)
என்ஜின் | |
வகை | லிக்யூடு கூல்டு, 4 stroke, SOHC |
Bore & Stroke | 84 mm x 81.5 mm |
Displacement (cc) | 452 cc |
Compression ratio | 11.5:1 |
அதிகபட்ச பவர் | 40.02 ps at 8000 rpm |
அதிகபட்ச டார்க் | 40 Nm at 5500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (eFI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ட்வின் ஸ்பார் ஸ்டீல் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 320 mm |
பின்புறம் | டிஸ்க் 270 mm ( ABS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக் |
முன்புற டயர் | 90/90 R21 ட்யூப் |
பின்புற டயர் | 140/80 R17 ட்யூப் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-8Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2245 மிமீ |
அகலம் | 852 மிமீ |
உயரம் | 1316 மிமீ |
வீல்பேஸ் | 1510 மிமீ |
இருக்கை உயரம் | 805 மிமீ – 845 மிமீ |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 168 மிமீ |
எரிபொருள் கொள்ளளவு | 17 லிட்டர் |
எடை (Kerb) | 196 kg |
ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயனில் காசா பிரவுன், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், ஸ்லேட் பாப்பி ப்ளூ, காமெட் ஒயிட், ஹான்லே பிளாக் என மொத்தமாக 5 வண்ணங்களை பெற்றதாக கிடைக்கின்றது.
2024 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
Himalayan 450 | EX-SHOWROOM | ON-ROAD PRICE |
---|---|---|
Base (Kaza Brown) | Rs.2,85,000 | Rs.3,41,186 |
Pass (Slate poppy blue /slate himalayan salt) | Rs.2,89,000 | Rs.3,46,533 |
Summit (Kamet White) | Rs.2,93,000 | Rs.3,51,580 |
Summit (Hanle Black) | Rs.2,98,000 | Rs.3,56,127 |
செர்பா 450 என அழைக்கப்படுகின்ற 452 சிசி என்ஜின் 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 பைக் அனைத்து விதமான சாலைகளுக்கும் பயணிக்க ஏற்ற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும்.
ஹிமாலயனின் 450 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.
RE Himalayan 450 பைக்கினை மைலேஜ் 30 Kmpl ஆகும்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.3.41 லட்சம் முதல் ரூ.3.56 லட்சம் வரை கிடைக்கின்றது.