Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Suzuki

2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.1.79 லட்சம் ஆரம்ப விலையில் ஃபேரிங் ரக சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை துவங்குகின்றது.

By MR.Durai
Last updated: 2,February 2025
Share
4 Min Read
SHARE

சுசூகி ஜிக்ஸர் sf 155

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 155 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2025 Suzuki Gixxer SF 155
  • Suzuki Gixxer SF 155 on-Road Price Tamil Nadu
  • 2025 Suzuki Gixxer SF 150 Rivals
  • Faqs சுசூகி ஜிக்ஸர் SF
  • 2025 Suzuki Gixxer SF 155 Bike Image Gallery

2025 Suzuki Gixxer SF 155

புதிய நேக்டூ ஸ்டைல் ஜிக்ஸர் 155 பைக்கின் அடிப்படையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஜிக்ஸர் SF 155 புதுப்பிக்கப்பட்ட மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் என மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki Eco Performance) நுட்பத்தினை பெற்று 155cc என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.6hp பவர், 13.8NM டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 Gixxer SF பைக் மாடலின் பரிமாணங்கள் 2,025 மிமீ நீளம், 715 மிமீ அகலம், 1035 மிமீ உயரம் கொண்டு இதன் வீல்பேஸ் 1,340 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஸ்விங்கார்ம்  மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 100/80-17M/C 52P மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ப்ளூடூத் மூலம் இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

  • GIXXER SF (OBD-2B) Rs. 1,51,635
  • GIXXER SF Special Edition (OBD-2B)  Rs. 1,52,137

(Ex-showroom)

2025 suzuki gixxer sf 155 blue

Suzuki Gixxer SF 155 on-Road Price Tamil Nadu

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • GIXXER SF (OBD-2B) Rs. 1,79,632
  • GIXXER SF Special Edition (OBD-2B)  Rs. 1,80,453

(All Prices on-road Tamil Nadu)

  • GIXXER SF (OBD-2B) Rs. 1,66,654
  • GIXXER SF Special Edition (OBD-2B)  Rs. 1,67,432

(All Prices on-road Pondicherry)

2025 சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 56mm x 62.9mm
Displacement (cc) 155 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 13.6 hp at 8000 rpm
அதிகபட்ச டார்க் 13.8 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 220 mm
வீல் & டயர்
சக்கர வகை  கேஸ்ட் அலாய்
முன்புற டயர் 100/80-17M/C 52P  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 140/60R17M/C 63P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2030 mm
அகலம் 715 mm
உயரம் 1035 mm
வீல்பேஸ் 1360 mm
இருக்கை உயரம் 795 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 148 Kg

சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் நிறங்கள்

கிரே உடன் பச்சை, வெள்ளை உடன் நீலம் மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்களில் ஜிக்ஸர் SF 155 பைக்கின் 2025 மாடல் கிடைக்கின்றது.

2025 suzuki gixxer sf 155 black
2025 suzuki gixxer sf 155 blue
சுசூகி ஜிக்ஸர் sf 155

2025 Suzuki Gixxer SF 150 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஃபேரிங் ஸ்டைல் மாடலான யமஹா R15 V4, பல்சர் ஆர்எஸ் 200 உட்பட கேடிஎம் ஆர்சி 200 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faqs சுசூகி ஜிக்ஸர் SF

2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?

ரூ.1.79 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை சுசூகி ஜிக்ஸர் SF 155 ஆன்ரோடின் விலை அமைந்துள்ளது.

சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

சுசூகி ஜிக்ஸர் SF 155 மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ வரை கிடைக்கும்.

சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 155 வேரியண்ட் விபரம் ?

ஃபேரிங் ஸ்டைல் கொண்ட ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்கில் டிஸ்க் மற்றும் ஸ்பெஷல் எடிசன் என இரண்டு உள்ளது.

சுசூகி ஜிக்ஸர் 155 என்ஜின் விபரம் ?

155cc என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.6hp பவர், 13.8NM டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 Suzuki Gixxer SF 155 Bike Image Gallery

சுசூகி ஜிக்ஸர் sf 155
2025 suzuki gixxer sf 155 blue
2025 suzuki gixxer sf 155 black
2025 suzuki gixxer sf and gixxer cluster
suzuki e access on road
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
TAGGED:Suzuki Gixxer SF
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved