இந்தியாவில் மினி கிளப்மேன் கார் ரூ.37.90 லட்சம் விலையில் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. மினி நிறுவனத்தின் நீளமான காராக விளங்கும் கிளப்மேன் கார் பிஎம்டபிள்யூ UKL தளத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.
மினி கிளப்மேன் என்ஜின்
கிளப்மேன் காரில் 192 ஹெச்பி , 280 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. முனபக்க வீல் டிரைவ் கொண்டுள்ள மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. டீசல்மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 7.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மினி கிளப்மேன் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 228 கிலோமீட்டர் ஆகும்.
மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று விளங்கும் கிளப்மேன் காரின் முன்பக்கத்தில் தேன்கூடு அமைப்புடன் அகலமான கிரில் , கிளாசிக்கல் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , வட்ட வடிவ பனி விளக்குகள் ,அகலமான ஏர் டேம்கள் என சிறப்பாக அமைந்து பக்கவாட்டில் 17 அங்குல அலாய் வீல் , பாடி கிளாடிங் போன்றவற்றை பெற்றுள்ளது. செங்குத்தான எல்இடி டெயில் விளக்குகள் ,இரட்டை கதவுகளை கொண்ட பின்புற கதவினை பெற்றுள்ளது.
உட்புறத்தில் நேர்த்தியான டேஸ்போர்டினை பெற்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேவிகேஷன் ,சிறப்பான டிசைன் கொண்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி காரின் 5வது மாடலாகவும் விலை உயர்ந்த மினி பிராண்டு மாடலாகவு மினி கிளப்மேன் கார் விளங்குகின்றது. மினி கிளப்மேன் காரின் விலை ரூ.37.90 லட்சம் (டெல்லி-எக்ஸ்ஷோரூம்) ஆகும்.