ரூ. 29.70 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள 2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் காரில் மூன்று டோர், 5 டோர் மற்றும் கன்வெர்டிபிள் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மினி கூப்பர் கிடைக்கும்.
2018 மினி கூப்பர்
நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டதாக விளங்கும் மினி கார்களில் உள்ள கூப்பர் முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்றதாக வெளியாகியுள்ள 2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் கூடுதலான மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற கூப்பர் மாடலில் மூன்று கதவு வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கின்றது. ஆனால் 5 டோர் கொண்ட மாடலில் டீசல் வேரியன்ட் மட்டும் கிடைக்கப் பெறுகின்றது. மேலும் கன்வெர்டிபிள் ரக மாடல் பெட்ரோலில் மட்டும் கிடைக்கும்.
189 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 280 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 7 வேக டியூவல் கிளட்ச் பெற்ற கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் கூப்பர் மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 235 கிமீ ஆகும்.
112 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 270 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் கூப்பர் மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 205 கிமீ ஆகும்.
புதிய மினி லோகோவை பெற்ற கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன் மற்றும் பின்புற பம்பரில் சிறிய மாறுதல்களுடன் , வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொண்டிருப்பதுடன் கூடுதல் ஆப்ஷனலாக மேட்ரிக்ஸ் எல்இடி விளங்குகள் வழங்கப்படுகின்றது. மொத்தம் 14 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்க உள்ளது.
இன்டிரியர் அமைப்பில் பியானோ கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சென்டரல் கன்சோல், மல்டி க்ரோம் கொண்ட எல்இடி விளக்கும் மற்றும் 12 விதமான நிறங்களை வழங்கும் ஆம்பியன்ட் லைட்டிங், 6.5 அங்குல வட்ட வடிவ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களை பெற்று விளங்குகின்றது.
2018 MINI Cooper Facelift Prices:
Variants | Prices |
2018 MINI Cooper 3 Door Diesel | ₹ 29.7 lakh |
2018 MINI Cooper 5 Door Diesel | ₹ 35 lakh |
2018 MINI Cooper 3 Door Petrol | ₹ 33.3 lakh |
2018 MINI Cooper Convertible Petrol | ₹ 37.1 lakh |