இந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் மாடலில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முன்னணி மாடல்களுடன் புதிய தலைமுறை மாருதி டிசையர் காரை ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாருதி டிசையர் Vs  எக்ஸென்ட் Vs அமேஸ் Vs  ஆஸ்பயர் Vs  அமியோ Vs  டிகோர்

முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி டிசையருக்கு சவாலாக ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், வோக்ஸ்வேகன் அமியோ மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்கள் மிக முக்கியமானதாகும். சமீபத்தில் வெளிவந்த டிகோர் மற்றும் புதிய எக்ஸென்ட் போன்ற கார்கள் மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

டிசைன்

புதிய டிசையர் கார் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் மிக நேர்த்தியான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. இதன் போட்டியாக விளங்கும் மற்ற காம்பேக்ட் ரக செடான் கார்களுமே சமீபத்திலே சந்தைக்கு புதிய மாற்றங்கள் மற்றும் அடிப்படை வசதியை பெற்றதாக வந்துள்ளது.

அளவுகளின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

பெட்ரோல் எஞ்சின் ஆப்டினில் கிடைக்கின்ற மாடல்களில் அதிகபட்ச மைலேஜ் வெளிப்படுத்துகின்ற மாடலாக மாருதி டிசையர் பெட்ரோல் விளங்குகின்து. முந்தைய என்ஜினில் மாற்றங்கள் இல்லையென்றாலும் மைலேஜ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் வெளிப்படுத்தும் கார் என்ற பெருமையை டிசையர் டீசல் ரக மாடல் பெற்று விளங்குகின்றது. டீசல் எஞ்சின் ஒப்பீட்டை காணலாம்.

டிசையர் விலை ஒப்பீடு பார்வை
மாடல் (ex-showroom, Delhi)  பெட்ரோல் டீசல்(automobiletamilan)
மாருதி டிசையர் ரூ. 5.45 – ரூ. 8.41 லட்சம்

ரூ. 6.45-ரூ. 9.41 லட்சம்

ஹூண்டாய் எக்ஸென்ட் ரூ. 5.42- ரூ. 7.55 லட்சம் ரூ. 6.32-ரூ. 8.45 லட்சம்
டாடா டிகோர் ரூ. 4.7 – ரூ. 6.19 லட்சம் ரூ. 5.60- ரூ. 7.09 லட்சம்
ஹோண்டா அமேஸ் ரூ.5.53 -ரூ. 8.43 லட்சம் ரூ. 6.66-ரூ. 8.44 லட்சம்
ஃபோர்டு ஆஸ்பயர் ரூ. 5.45-ரூ. 8.29 லட்சம் ரூ.6.55 -ரூ. 7.99 லட்சம்
ஃபோக்ஸ்வேகன் அமியோ ரூ. 5.53- ரூ. 7.38 லட்சம் ரூ. 6.93- ரூ. 9.88 லட்சம்