Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

நான்காம் தலைமுறைக்கான லெக்ஸஸ் ஹைபிரிட் காரின் சிறப்பம்சங்கள்….

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 15,September 2018
Share
3 Min Read
SHARE

லெக்ஸஸ் நிறுவனம் தனது முழுவதும் புதிய ஹைபிரிட் எலெக்ட்ரிக் செடான் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் அறிமுகம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் நடைபெற்று உள்ளது. இந்த கார், முழுவதும் புதிய குளோபல் ஆர்க்கிடெக்ட்ஸர் – K (GA-K) பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. ES 300h கார்கள், 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் புதிதாக நான்காம் தலைமுறைக்கான லெக்ஸஸ் ஹைபிரிட் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. லெக்ஸஸ் இந்தியா, ஏற்கனவே புதிய ES 300h கார்கள் அறிமுகமாக உள்ளத்தை அறிவித்தது இருந்தது. இந்த கார்களின் விலை 59.13 லட்ச ரூபாயாகும் ( எக்ஸ் ஷோ ரூம் விலை, இந்தியாவில்)

இந்த கார்கள் குறித்து பேசிய லெக்ஸஸ் இந்தியா உயர் அதிகாரி என். ராஜா, இந்தியாவில் புதிய ES கார்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆடம்பரமான காராக இருப்பதோடு, அழகிய வசதிகள் கொண்ட காராகவும் இருக்கும் என்றார்.

புதிய ES கார்களின் டெலிவரிகள் நாடு முழுவதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த கார்கள் சிக்னேச்சர் லெக்ஸஸ் ஸ்டைல் மற்றும் முழுமையான எரிபொருள் டேங்க் உடன் விற்பனைக்கு வரும். இதுகுறித்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கையில், லெக்ஸஸ் ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள், வாடிக்கையாளர்களுடன் இணைந்து தனிப்பட்ட தொடர்புகளை வளர்த்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் முதல் சந்திப்பிலேயே, அவர்கள் வாடியாக்யாளர்களை கார்களின் உரிமையாளராக மாற்றி விடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ES 300h குறித்து பேசிய லெக்ஸஸ் இந்தியா தலைவர் வேணுகோபால், இந்த கார்கள் அழகிய வடிவமைப்புடன், புதிய மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. இது அதிகாரிகளுக்கான செடான் காராக இருப்பதுடன், சிறந்த செயல்பாட்டையும் கொண்டிருக்கும் என்றார்.

இந்த கார்களில் நிலையான மற்றும் சிறந்த டிசைன்கள் மட்டுமின்றி நவீன லெக்ஸஸ் செக்நேச்சர் ஸ்பெண்டல் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிசைன் LC கூப் மற்றும் LS போன்று இருப்பதுடன், சில தனிப்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக வெர்டிக்கல் கிரில் பேர்ட்டன், சிலிம் LED ஹெட்லேம்கள் மற்றும் சிசெல்ட் LED டைல்லேம்ப்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஆடம்பர கார் என்பதையும் காட்டுவதுடன், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் என்பதையும் தெளிவாக காட்டுகிறது. இந்த கார்கள் GA-K பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய லெக்ஸஸ் ES 300h கார்கள் 9 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வெளிப்புறத்தில் பெயின்ட் பெலேட்களால் அழகாக வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த வண்ணத்தின் ஷேடுகள், ஐஸ் ஈக்ரூ என்று அழைக்கப்படுகிறது. இவை மிம்கிக் கோல்டன் லைட் போன்று பிரதிபலிக்கும்.

காரின் உட்புறத்தை பொருத்தவரை, நான்கு கலர் ஸ்கிம்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று டைப்கள் டிரிம், இவை புதிய ரிச் கிரிம் கலரை உள்ளடக்கியதாக இருக்கும். அடர்ந்த பிரவுன் டாஷ்போர்டு மற்றும் ரூப் ரிம்களை கொண்டாதாக இருக்கும். இதுமட்டுமின்றி
ஷிமமொகு உட் டிரிம் (பிளாக், பிரவுன்) மற்றும் ஒளி வண்ண மூங்கில் ஆகிய இரண்டு ஷேடுகளில் கிடைக்கிறது. இன்ஜினை பொறுத்தவரை, ES 300h கார்களில் , யூரோ 6 கம்ப்ளைன்ட் புதிய ஹைபிரிட் எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், இது 22.37 kmpl மைலேஜ் கொடுக்கும். இதுமட்டுமின்றி மொத்த ஆற்றலாக 160kw -ஆக இருக்கும்.

இதுமட்டுமின்றி கான்சோல் உடன் பொருத்தப்பட கிளைமேட் மற்றும் ஆடியோ கண்ட்ரோல் மற்றும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான செமி-அனிலின் சீட்கள், பெரியளவிலான வீல் பேஸ்களுடன், பயணிகளுக்கு விரிவான லெக் ரூம்-ஐ கொடுக்கும் வசதியையும் கொண்டுள்ளது. இந்த காரிகளில் உள்ள ஆடியோ, 17 ஸ்பீக்கர் மார்க் லிவின்சன் புயூர் பிளே சிஸ்டமாக இருக்கும். பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை 10, ஏர்பேக்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன நிலைப்பு தன்மை கண்ட்ரோல் மற்றும் திருட்டை தடுக்கும் முறைகளுடன், பிரேக்-இன் டில்டேட் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகள் வாகன விற்பனை நிலவரம் 2016-2017
பிப்ரவரி 22.., சஃபாரி எஸ்யூவி காருக்கு முன்பதிவை துவங்கிய டாடா மோட்டார்ஸ்
புதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது
ஜூன் 3ல் ஆல்-வீல் டிரைவ் டாடா ஹாரியர் இவி அறிமுகமாகிறது.!
tata sierra: மீண்டும் வந்த டாடா சியரா எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020
TAGGED:Lexus UX Hybrid
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved