அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரினை சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை தோற்ற அமைப்பில் மட்டும் குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றுள்ளது. இன்டிரியரில் பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியாக உள்ளது.
புதிய வெர்னா காரின் தோற்ற அமைப்பு அகலமான ஹூண்டாயின் பாரம்பரிய ‘கேஸ்கேடிங் கிரில் உடன் அமைந்து புதிய தோற்ற அமைப்பினை வழங்கும் ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர் வடிவமைப்பினை கொண்டுள்ளது. பின்புறத்தில், பம்பர், டெயில் எல்இடி கிளஸ்டரை பெற்றுள்ளது.
இன்டிரியர் அமைப்பில், டேஸ்போர்டின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் வந்துள்ள இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தொடுதிரை ஆதரவை பெற்ற 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூலிங்க் டெக்னாலாஜி வசதியுடன் வரவுள்ளது. இந்த நுட்பம் முன்பாக வெளியான ஹூண்டாய் வென்யூ, மற்றும் எலன்ட்ரா காரில் உள்ளது.
இந்தியாவுக்கான புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவாக வரவுள்ளது. சமீபத்தில் சீன சந்தையில் ஐஎக்ஸ் 25 அல்லது ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி வெளியானது. இதனை தொடர்ந்து தற்பொழுது வெர்னா காரும் வெளியாகியுள்ளது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது.