Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2021 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

by automobiletamilan
October 15, 2020
in கார் செய்திகள்

இந்தோனேசியா சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2021 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலண்டில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

இந்தோனசியா,இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா க்ரீஸ்டா காரின் மேம்பட்ட மாடலாக தற்போது வந்துள்ள புதிய க்ரிஸ்டா விளங்குகின்றது. குறிப்பாக தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் வசதிகளில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி இன்ஜின் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தோனேசியாவில் இன்னோவா க்ரீஸ்டா டூரிங் ஸ்போர்ட் மாடல் வென்ச்சூரர் என்ற பெயரில் கிடைக்கின்றது.

2021 டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா

இன்னோவா க்ரீஸ்டா காரின் தோற்ற அமைப்பில் முகப்பில் முன்புற கிரில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு இப்போது 5 ஸ்லாட் கிரில் பெற்று வெளிப்புறத்தில் க்ரோம் பூச்சு பெற்றுள்ளது. அதே நேரத்தில் எல்இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டு ஹெட்லைட்டின் சில இடங்களில் க்ரோம் பூச்சு சேர்க்கப்பட்டுள்ளது.

முன்புற பம்பர் அமைப்பு உட்பட பனி விளக்கு அறை போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.பக்கவாட்டு அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டு 16 அங்குல அலாய் வீல் சில்வர் நிறம் மற்றும் டாப் வேரியண்டில் டைமன்ட் கட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமல், தற்போது விற்பனையில் உள்ள மாடலை போலவே அமைந்திருக்கின்றது. மேலும் 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

6 கேப்டன் இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் பெற்ற ஆப்ஷனில் தொடர்ந்து டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா விற்பனை செய்யப்பட உள்ளது.

இன்னோவா க்ரீஸ்டா இன்ஜின்

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காரில் பிஎஸ்-6 ஆதரவினை பெற்ற  2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. 166 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 150 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டிலும் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

2021 இன்னோவா க்ரீஸ்டா இந்தியா அறிமுகம் எப்போது ?

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்படலாம். அடுத்த சில மாதங்களில் மேம்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வரவுள்ளது.

web title : 2021 Toyota Innova Crysta facelift debut

For the latest Tamil auto news and Truck News, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.

Tags: Toyota Innova Crystaடொயோட்டா இன்னோவா கிரிஸ்டா
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version