Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஃபோர்ட் ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
April 26, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம், புதிதாக க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் மாடலை ரூ. 5.09 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ. 6.09 லட்சம் (டீசல்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோர்டு ஃபிரீஸ்டைல்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ஃபீரிஸ்டைல் கார் மாடல் , விற்பனையில் உள்ள மாருதி இக்னிஸ், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சரா, ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடியான போட்டியாக இல்லாமல் வந்திருந்தாலும் சவாலாகவே ஃபிரீஸ்டைல் விளங்க உள்ளது.

ஃபீகோ அடிப்படையிலான இந்த க்ராஸ்ஹேட்ச் மாடலில் பெட்ரோல் , டீசல் எஞ்சின் என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது.  ஃப்ரீஸ்டைல் காரில் 96 ஹெச்பி ஆற்றல், 120 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டிராகன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 19 கிமீ ஆகும்.

100 ஹெச்பி ஆற்றல் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றிருக்கும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.4 கிமீ ஆகும்.

ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என மொத்தம் நான்கு விதமான வேரியன்ட்களை பெற்றிருக்கும், இந்த மாடல்களில் ஏபிஎஸ், இபிடி, இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் பின்புற பனி விளக்கு ஆகிய அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை நிரந்தரமாக பெற்று விளங்குகின்றது.

ஃபீரிஸ்டைல் கார் மிக நேர்த்தியான தேன்கூடு கிரிலுடன், அகலமான பானெட், ஸ்கிட் பிளேட் மற்றும் கருப்பு நிற பூச்சினை கொண்ட ஹெட்லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது. 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்டு சிங்க் 3 பெற்றிருப்பதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றுடன் 6 காற்றுப்பைகள் கொண்டதாக உள்ளது. கேனயான் ரிட்ஜ், ஸ்மோக் கிரே, மோனோடஸ்ட் சில்வர், வெள்ளை கோல்டு, வெள்ளை மற்றும் கருப்பு என மொத்தம் 6 விதமான நிறங்களில் ஃப்ரீஸ்டைல் கிடைக்க உள்ளது.

ஃபோர்டு ஃபீரிஸ்டைல் விலை பட்டியல்

வேரியன்ட்பெட்ரோல்டீசல்
ஆம்பியன்ட்ரூ.5.09 லட்சம்ரூ.6.09 லட்சம்
டிரென்ட்ரூ.5.99 லட்சம்ரூ.6.99 லட்சம்
டைட்டானியம்ரூ.6.39 லட்சம்ரூ.7.35 லட்சம்
டைட்டானியம் +ரூ.6.94 லட்சம்ரூ.7.89 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: Ford FreestyleFord Indiaஃபிரீஸ்டைல் கார்ஃபோர்டு இந்தியாஃபோர்டு ஃபிரீஸ்டைல்ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan